புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் பெரியாரின் முழு உருவச் சிலை நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். புதுக்கோட்டை விடுதியில் அரசு தொடக்கப் பள்ளி அருகே திராவிடர் கழகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் படிப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அருகே 2013-ல் சுமார் ஏழரை அடி உயரத்தில் பெரியாரின் முழு உருவ சிமென்ட் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு […]
Day: March 21, 2018
1,500 தம்பதிகளை சேர்த்து வைத்து சாதனை: சேவை மனப்பான்மையுடன் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்
சென்னையில் பெண் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் தன்னிடம் பிரச்சினையுடன் வந்த 1500 தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைத்துள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். சென்னை ஐகோர்ட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜெயமணி (56). இவர் மற்ற போலீஸார் போல் தினசரி வேலையில் மூழ்கி விடுவதோடல்லாமல் கூடுதலாக தனிப்பட்ட முறையில் சில வேலைகளை செய்துள்ளார். இதன் மூலம் பலராலும் பாராட்டப்படும் இவரது சேவை அறிந்து காவல் […]