தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமோனி இதற்கு முன்னர் வேறொரு மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு காவலரை நேரில் சென்று கட்டி அணைத்து அவரை தேற்றி ஆறுதல் சொல்லி எதுவானாலும் இனி நீ […]
Day: March 8, 2018
ரூ.390 கோடியில் 82 புதிய திட்டங்கள்; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அறிவிப்பு- 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது சென்னை மாநகரட்சி ஆணையர் கார்த்திகேயன், சிறந்த காவல் ஆணையரகத்துக்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி முதல்வர் பாராட்டினார்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 3 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: அரியலூரில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படும். பெரம்பலூர், சின்ன முட்லூ பகுதியில் […]
பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை கருத்து: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- தபெதிகவை சேர்ந்த 3 பேர் கைது
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இதையடுத்து கோவையில் 6 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் தாக்குதல் இந்நிலையில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் […]