Police Department News

மதுரவாயலில் துணிகரம்; விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: பெண் உட்பட 3 பேர் கைது 2 பேர் ஓட்டம்

கைது செய்யப்பட்ட ராஜா, அஷோக் விக்டர், கைப்பற்றப்பட்ட வாகனம் சென்னையை அடுத்த போரூர் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு, பாரதியார் தெருவில் வசிப்பவர் சுந்தரசெல்வி(52), இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுந்தரசெல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலயில் இவருக்கு தீனதயாளன்(46) என்பவர் பழக்கமாகியுள்ளார். தன்னை வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார். இதில் அடிக்கடி சுந்தரசெல்வி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுந்தரசெல்வியின் வீட்டிற்கு வழக்கம்போல் […]

Police Department News

சாலையோரம் கிடக்கும் முதியவருக்கு லுங்கியை வாங்கி போர்த்துகிறார், 2.அவரை தூக்கி ஓரம் அமரவைக்கிறார், 3.உணவு எதாவது வேண்டுமா என்று கேட்கிறார், 4.செய்த உதவிக்கு பெரியவர் கையெடுத்து கும்பிடுகிறார்

சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் கிடந்த முதியவருக்கு புது லுங்கி வாங்கி அணிவித்து அவரை தூக்கி ஓரம் உட்கார வைத்து குறைகளை கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி போட்டுள்ளது வைரலாகி வருகிறது. காவல்துறையில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் துறை போக்குவரத்து காவல்துறை மட்டுமே. காரணம் மோட்டார் வாகனம் செலுத்தும் சாதாரண மக்களிடம் நல்லதோ கெட்டதோ தினமும் மல்லுக்கட்டுவது இவர்களே. சென்னை முதல் தமிழகம் முழுதும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் […]

Police Department News

சென்னை ட்ரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை

தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள டிரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து குரங்கணிக்கு ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து டிரக்கிங் செல்வோரை அழைத்து சென்றதாக பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப்பிலும் தேனி போலீசார் ஆய்வு நடத்தினர். நீலாங்கரை காவல் நிலையத்தில் டிரக்கிங் […]

Police Department News

சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் கைது

சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் […]