புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். காலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த […]
Day: March 20, 2018
ஆர்டர்லி முறை பின்பற்றப்படுகிறதா? காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி கேள்வி
ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காவல் உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதற்காக, காவல்துறையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆர்டர்லியாக பணியமர்த்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர்லி முறை கைவிடப்பட்டது. இருப்பினும், சில காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையில் பணியில் இருப்பவர்களையே, ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 1979ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், […]