விருதுநகர் மாவட்டம்: அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவையும் மீறி வெளியில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று காவல்துறையினர் எடுத்து கூறிவந்த நிலையில் அவ்வாறு கேட்காத இருசக்கரவாகனத்தில் சுற்றிதிறிந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதனால் காவல்நிலையம் முழுமையும் வாகனங்களால் சூழ்ந்துள்ளது, வாகன உரிமையாளர்களின் பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள் பெற்ற பின்பே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் ,இந்த திடீர் நடவடிக்கையினால் ஆங்காங்கே இருசக்கரவாகனத்தை […]
Day: April 4, 2020
கரோனா தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து மத தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: தலைமைச் செயலர் கே.சண்முகம் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மதத் தலைவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில், மதத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முஸ்லிம்கள் சார்பில் சுன்னத் பிரிவின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா முஸ்லிம் தலைமை […]
ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு
ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமி ழகத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியிடங்களில் சுற்றுபவர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லை களும் மூடப்பட்டுள்ளன. போலீஸாரும் தடுப்பு வேலிகள் அமைத்து கண் காணித்து வருகின்றனர்.தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தேவையின்றி வெளியே இயக்கப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படு கின்றன. […]