வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி வீட்டில் இருக்கும் தங்களது குழந்தைகளின் ஓவியத்திறமையினை கொண்டு கொரோனாவினை எதிர்க்கலாம். ஒரு A4 தாளில் “கொரோனாவிற்கு எதிரான போர்” என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்து ஏப்ரல் 26-ம் தேதிக்குள் எங்களுக்கு புகைப்படம் எடுத்து சுயவிவரங்களுடன் அனுப்பி வையுங்கள். சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 29-ம் தேதி பதிவிடப்படும். ஓவியங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி tnpcontest@gmail.com. மேலும் உங்களது குழந்தையின் பெயரை […]
Day: April 24, 2020
ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள்.
ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள். கொரனோ தொற்று நோய் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊத்தங்கரையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பெருகோபனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் அரிசி காய்கறி பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பெருமளவு […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்! கடையநல்லூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் வீடுகளிலே தொழவேண்டும் மற்றும் கஞ்சி பள்ளிவாசலில் வினியோகம் கூடாது.. மேலும் இரவுத் தொழுகையை பள்ளிகளில் தொழ வேண்டாம் என்று நிர்வாகிகளை டிஎஸ்பி சக்திவேல் அவர்கள் கேட்டு கொண்டார்.
சோதனை சாவடிகளில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சோதனை சாவடிகளில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. ஊரடங்கையொட்டி நெல்லை மாநகர் […]
மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் முழு முயற்சியால் இன்று 23.04.2020- ம் தேதி மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் […]
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர்.
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர். பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவூர் வட்டாரப் பகுதி கிராம மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கன்னங்குளத்தில் பணம் எடுத்து செல்கின்றனர், மேலும் 14 கிராமங்களில் பணம் எடுக்கும் வாய்ப்பு உருவாக்க பட்டு உள்ளது. பணகுடி காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது […]