மதுரை மாநகர் தெற்கு மற்றும் திலகர்திடல் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு. மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் கூடுதல் உதவி ஆணையர் அவர்களின் உத்தரவுப்படிதெற்கு மற்றும் திலகர்திடல் போக்குவரத்து சார்பில் யு. சி. மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் இணைந்து தலைக்கவசம் பயணிகளுக்கு படியில்பயணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வில் தெற்குவாசல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கணேஷ்ராம் திலகர்திடல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கார்த்திக் உதவி ஆய்வாளர் […]
Month: January 2023
: மதுரையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு விதி முறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும்
: மதுரையில் கொரோனா தொற்று நோய் தடுப்பு விதி முறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் மதுரை மாவட்டம் தெற்கு வட்டம் அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.23 தேதியன்றும் மற்றும் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்ள் முறையே 16.01.23 மற்றும் 17.01.23 தேதிகளில் ஜல்லிகட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.23 ம் தேதி நன் […]
குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்-புதிதாக பொறுப்பேற்ற மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் உறுதி
குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்-புதிதாக பொறுப்பேற்ற மதுரை சிட்டி போலீஸ் கமிஷனர் உறுதி மதுரை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்.புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார். மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். […]
கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது
கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் […]
மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும். மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை […]
பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது .
பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கிலிகாப்புக் காட்டு பகுதியில் கொட்டகை அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு சென்ற வனத்துறையினர் மலையூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (வயது .45), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது. 37) ஆகியோர் அனுமதியின்றி யானைகள் செல்லும் வழித்தடத்தில் கொட்டகை அமைத்தும், காட்டுமரங்களை வெட்டி, ஆட்டுபட்டி அமைத்து, நாய்களை வைத்து […]
பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்.
பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36), விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு உள்ள கொட்டகையில் 2 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டு முன்பு ஆடு கத்தும் சத்தம் கேட்டு பெருமாள் கண் விழித்து எழுந்து பார்த்துள்ளார். அப்போது பெருமாளின் 2 ஆடுகளை மோட்டார் சைக்கிளில் தூக்கி வைத்து மர்ம நபர்கள் 2 பேர் […]
மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?- வனத்துறையினர் தீவிர விசாரணை
மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?- வனத்துறையினர் தீவிர விசாரணை மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே தேவன்குளம் உள்ளது. இங்கு எம்.மலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பறவைகள் திடீரென கூச்சலிட்டு பறப்பதையும் அதன் அருகே 2 சிறுத்தை புலிகள் ஓடியதை பார்த்து அதனை அவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அருகிலுள்ள வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்துள்ளன. இந்த வீடியோ மேலூர் பகுதியில் வைரல் […]
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இழுபறி- போராட்டத்தால் போலீஸ் குவிப்பு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இழுபறி- போராட்டத்தால் போலீஸ் குவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு […]
திருச்சி மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை
திருச்சி மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் சத்ய பிரியா […]