இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார் (29), அவரது பெரியப்பா துரைராஜ் (55) ஆகிய 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராணுவ வீரர் சுரேஷ் (27) தப்பி ஓடினார். தென்காசி எஸ் பி சாம்சன் மற்றும் போலீசார் […]
Day: June 30, 2023
தென்காசி குற்றாலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது
தென்காசி குற்றாலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் கைது தென்காசியை அடுத்த நன்னகரம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 60). இவர் சம்பவத்தன்று இரவு 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அங்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அங்கு வரவே, சண்முகசுந்தரம் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீசார் […]
கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதி சாவு
கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதி சாவு சேலம் தடாகப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதியாக இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இவர் திடீரென நெஞ்சு வலியில் மயங்கி விழுந்து சரிந்தார். அவரை ஜெயில் போலீசார் உடனடியாக மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு […]
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..!
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..! தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று பொறுப்பு ஏற்கிறார்..! தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை புதிய போலீஸ் கமிஷனராக போலீஸ் […]
தர்மபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 12 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 12 பேர் கைது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி விற்ற 12 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர் இதேபோல் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மது […]