பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பெண் நீதித் துறை நடுவர் முன்புதான் ஆஜர்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முருகன் (34) என்பவரை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் 17.4.2023-ல் கைது செய்தனர். அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு […]
Day: June 29, 2023
பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது
பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு […]
கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது
கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய […]
கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாணவர் கைது
கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த மாணவர் கைது மதுரை பேரையூரை சேர்ந்த குப்பாபுலி மகன் வாசுராஜா(23). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். அப்போது அதேகல்லூரியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற வாசுராஜா மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார். […]
குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம்
குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார். அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார்
பண்ருட்டி அருகே நகை, கார் திருடிய சென்னை வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்: சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று மடக்கிய போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
சிவகங்கை மாவட்டம் முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு
சிவகங்கை மாவட்டம் முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, […]
போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி காரைக்குடி, தேவகோட்டையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். காரைக்குடியில் உட்கோட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கினார். வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக சென்று மீண்டும் கண்ணதாசன் […]
ஓட்டலில் பணம் பறித்த கும்பல்
ஓட்டலில் பணம் பறித்த கும்பல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர். அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் […]
வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை காமராஜர்புரம் கக்கன் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் திருமுருகன் (வயது23). இவர் அரசு வேலைக்காக 2 வருடங்களாக படித்து வருகிறார். இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமுருகனின் தந்தை முத்துராமலிங்கம் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு […]