மதுரை சோழந்தான் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவரது மகன் நாகபாண்டி (வயது 21). இவர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில்விரக்தி அடைந்த நாகபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடுப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Day: June 3, 2023
கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்: 30 மோட்டார் சைக்கிள்கள்-கார் உடைப்பு
கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்: 30 மோட்டார் சைக்கிள்கள்-கார் உடைப்பு மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமோகூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காலமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 10 நாட்களாக வைகாசி பெருந்திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை சுவாமி-அம்பாள் சட்டதேரில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு மெயின்ரோட்டில் உள்ள கலையரங்கத்தில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆடல்-பாடல் […]
தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி பெண்களிடம் பணம் ரூ.6 லட்சம் மோசடி
தருமபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி பெண்களிடம் பணம் ரூ.6 லட்சம் மோசடி தருமபுரி அருகே உள்ள அமுதம் காலனி பகுதியில் ட்ரான்ஸ் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் படித்த குடும்ப பெண்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி சமூக வலைதளம் மற்றும் உள்ளுர் சேனல்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். விளம்பரத்தை பார்த்த பெண்கள் அந்த நிறுவனத்தை அனுகியுள்ளனர்.நிறுவனத்தில் வேலை […]
அரிசி கொம்பன் யானையின் அவலம்- ரொம்ப சாதுவானது, அன்பானது என்கிறார்கள் மூணாறு மக்கள்
அரிசி கொம்பன் யானையின் அவலம்- ரொம்ப சாதுவானது, அன்பானது என்கிறார்கள் மூணாறு மக்கள் பொதுவாகவே யானைகளை அதன் போக்கிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்பாடு செய்து விட்டாலே பிரச்சினை தீர்ந்து விடும்.கொஞ்சம் அரிசி கொடுத்தால் அரிசி கொம்பன் நிச்சயம் குழந்தையாக மாறி விடுவான்.மன அழுத்தம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல. யானைகளுக்கும் உண்டு. அரிசி கொம்பன் யானை தொடர்பான சர்ச்சைகள் இதைத்தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. அரிசி கொம்பன் என்ற பெயரை கேட்டதும் அதன் உருவத்தை பார்த்ததும் […]
ஊமையன் கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி .
ஊமையன் கொட்டாய் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஊமையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (வயது.35) இவரது மனைவி ரேவதி (வயது.32)இவர்களுக்கு பிரவின்குமார் (வயது.14), தனஸ்ரீ (வயது.10) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார், அப்போது சுவற்றில் இருந்த மின்சாரமீட்டர் மீது எதிர்பாரத விதமாக கை வைத்துள்ளார், உடனே மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்து மயக்கமானார்.இவரது அலறல் சத்தம் […]
கடலூர் முதுநகரில் இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; 9 பேர் மீது வழக்கு
கடலூர் முதுநகரில் இரு தரப்பினர் மோதல் 2 பேர் காயம்; 9 பேர் மீது வழக்கு கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் […]
ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குறித்து புகார் கொடுக்கலாம்
ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் குறித்து புகார் கொடுக்கலாம் தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வினியோகித்து வருகிறது அவ்வாறு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் இந்த நிலையில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசார் பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் பற்றி ரகசிய தகவல் தெரிவிக்க கட்டிணமில்லா […]
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு DGP உத்தரவு
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு DGP உத்தரவு கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளிப்பது கட்டுப்பாடுகள் தொடர்பான வழி காட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கோவில் விழா குழுவினர்ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் மாவட்ட எஸ்.பி.க்கள் கமிஷணர்கள் 7 நாட்களுக்குள் மனுவின் மீதான முடிவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அனுமதி அளிக்கவோ மறுக்கவோ நடவடிக்கை இல்லையென்றால் விழாக்குழுவினர் 8 வது நாள் […]