போக்குவரத்து சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஹலோ எப்.எம். சார்பில் 105 பென் டிரைவ்கள் சென்னை மாநகர சாலைகளில் 105 போக்குவரத்து சந்திப்புகளில் மியூசிக் சிக்னல்கள் வசதி உள்ளது. இந்த சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இனிமையான பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஹலோ எப்.எம். சார்பில் மியூசிக் சிக்னல்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பென் டிரைவ்வுகள் தயாரித்து போக்குவரத்து போலீசாரிடம் வழங்ப்பட்டுள்ளன இது தொடர்பாக ஹலோ எப்.எம். 105 பென்டிரைவ்வுகளை வழங்கி இருக்கிறது. இதனை […]
Day: June 2, 2023
மதுரை மேலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடை உரிமையாளர் கைது
மதுரை மேலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடை உரிமையாளர் கைது மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் […]
பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது
பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளிடம் கைவரிசை காட்டிய திருடன் கைது மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது60). இவர் ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றி ருந்தார். அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்தார் அப்போது அவருடன் சென்ற பேத்தியை காணவில்லை. தேடி பார்த்தபோது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த ½ பவுன் வளையல் […]
கேரளாவில் தொழிலாளியை கம்பியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் கைது-தென்காசி பஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
கேரளாவில் தொழிலாளியை கம்பியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் கைது-தென்காசி பஸ் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22). இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது […]
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து இவர்கள் […]
பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்
பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது, பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர். அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி […]
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினம் தோறும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் […]
மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் பால்குடம் திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் பால்குடம் திருவிழா நேற்று மதுரை திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அலகு பறவை காவடிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து எடுத்து திருபரங்குன்றம் சென்றனர் இதற்கு எந்தவித போக்குவரத்து இடையூறு இல்லாமல் பக்தர்களின் பாதுகாப்பான வழிபாட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பளித்தனர்.காவல் உதவி ஆணையர் செல்வின் தெற்கு வாசல் சரக போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கனேஷ்ராம் அவர்கள் […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல். தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு எட்டிமரத்துப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி நுரம்பு மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் டிப்பர் லாரியையும், நுரம்பு மண்ணையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை […]
தென்காசியில் டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தென்காசியில் டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை […]