Police Recruitment

பாலக்கோட்டில் , உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.

பாலக்கோட்டில் , உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு. தர்மபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வரப்பட்ட புகார் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். உத்தரவின் பேரில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே. நந்தகோபால் அவர்கள், பாலக்கோடு பஸ் நிலையம், எம். ஜி. ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் […]

Police Recruitment

வாங்கிய கடனை தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.

வாங்கிய கடனை தர மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அமானி மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது60). கட்டிட மேஸ்திரி. இவருக்கு நாகம்மாள் (45) என்ற மனைவி உள்ளார். முனிராஜ் அடிக்கடி கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் போன்ற வெளியூர்களில் சென்று தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இதன்காரணமாக அவர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்குவந்து செல்வார். இவருக்கு குடிபழக்கமும்உள்ளது.இந்த நிலையில் முனிராஜின் மனைவி நாகம்மாள் மகளிர் சுயஉதவிகுழு மூலமாக […]

Police Recruitment

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி மதுரை மாவட்டம் திருமங்கலம் சாத்தங்குடியை சேர்ந்தவர் உதயபாண்டி. இவரது மனைவி காயத்ரி(வயது29). சம்பவத்தன்று செல்போன் மூலம் இவரிடம் பேசிய மர்ம நபர் ரூ.10 லட்சம் கடன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை நம்பிய காயத்ரி சம்பவத்தன்று மாட்டுத் தாவணி அருகே சரவணன் என்பவரிடம் ரூ.3 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் கண்ணிமைக்கும் […]

Police Recruitment

காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி

காண்டிராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பானுகோபன்(வயது36). கட்டிட காண்டிரக்டரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துச் சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய்(27) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். […]

Police Recruitment

மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி

மதுரையில் பெற்றோர் மது குடித்து துன்புறுத்தியதால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சிறுமி ‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்ற விழிப்புணர்வு வாசகம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருப்பதை காணலாம். அதனை பார்த்துக் கொண்டே நாள்தோறும் ஏராளமான கடந்து செல்கின்றனர். மதுவினால் நாடும்… வீடும்… எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பதை யோசிப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லாமல் ஓடுகிறோம். இன்றைய நவீன காலத்தில் மது குடிப்பது பகட்டான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிலும் இன்று இருபாலரும் ஒன்றாக சேர்ந்து மது குடிக்கின்றனர். ஆண்களுக்கு […]

Police Recruitment

திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி

திருமங்கலம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளிகள் 2 பேர் பலி திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது55). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்க நான்கு வழிச்சாலையை கடப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த முத்துபாண்டி(52), திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் வெங்கடசாமி(49) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். […]

Police Recruitment

மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என கலெக்டரிடம் புகார்

மருத்துவ செலவு பண பலன்கள் சரியாக கிடைக்கவில்லை என கலெக்டரிடம் புகார் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருவூல கமிஷனர் மற்றும் ஓய்வூதியத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 149 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். இதில் அதிகமானோர் சரியான முறையில் ஓய்வூதிய பணம் வந்து சேருவதில் பிரச்சினை ஏற்படுகிறது என்றும், மேலும் குடும்ப அட்டை மருத்துவ செலவுகளுக்கான […]

Police Recruitment

தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது […]

Police Recruitment

கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகள்

கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை மாணவ-மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் உள்ள பழமையான சங்கராலிங்கபுரம் அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு தற்போது அரசு ஆதிதிராவிடர் பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை மாற்றவும் கூடாது, பழைய பெயரிலேயே செயல்பட வேண்டும். அதேபோல இந்த பள்ளியின் கட்டிடம் […]

Police Recruitment

வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேனுடன் 131 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சோளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு ஒரு சரக்கு வேன் வந்தது. அதில் 3 பேர் இருந்தனர். அந்த வேனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது மொத்தம் 131 கிலோ தடைசெய்யப்பட்ட […]