தர்மபுரி மாவட்டம் திருமணம் நிச்சயித்த மறுநாளில் பட்டதாரி பெண் தற்கொலை தர்மபுரி வேப்பமரத்துக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மர்லின் பிராண்டோ. இவரது மகள் தீபிகா பிஎஸ்சி பி. எட்., பட்டதாரியான இவர், தர்மபுரியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வந் தார். தீபிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென தீபிகா மயங்கி விழுந்தார்.இதைக் கண்ட பெற்றோர், உடனடியாக […]
Day: June 12, 2023
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கறிக்கடைக்காரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் கறிக்கடைக்காரர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தபாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (24). இவர் ஈரோடு பள்ளிபாளையம் கறிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவி குழந்தைகளுடன் வந்த முருகன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உடனடியாக […]
மேலூர் அருகே வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி
மேலூர் அருகே வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து – 15 பேர் பலி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். வேனை சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை 9 மணியளவில் வேன் மேலூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் […]
மதுரை மேலூர் அருகே போர்வை வியாபாரியாக நடித்து கஞ்சா கடத்தியவர் கைது
மதுரை மேலூர் அருகே போர்வை வியாபாரியாக நடித்து கஞ்சா கடத்தியவர் கைது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வீதி வீதியாகச் சென்று போர்வைகள் விற்று வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த போர்வைகள் குளிரை தாங்கும் என அவர்கள் கூறுவதை நம்பி ஏராளமானோர் வாங்கி வருகின்றனர். போர்வை வியாபாரத்தை பயன்படுத்தி போதைப் பொருளான கஞ்சாவை சிலர் விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலை பகுதியில் போலீஸ்காரர்கள் கோபால் […]
சோதனைக்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சோதனை
சோதனைக்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சோதனை திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெண்ணிலா. இவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், திருவளர்ச்சோலை பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்த சென்றார். அங்கு அவர் சோதனையை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, 10-க்கும் மேற்பட்டோர் உதவி ஆய்வாளர் வெண்ணிலாவின் வாகனத்தை மறித்து எப்படி சோதனை நடத்தலாம் என்று கேட்டு, அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் […]
அபராத தொகை ரூ.500 இருந்தால் ஒருநாள் குடும்ப செலவை சமாளிக்கலாம்- போலீசார் அறிவுரை
அபராத தொகை ரூ.500 இருந்தால் ஒருநாள் குடும்ப செலவை சமாளிக்கலாம்- போலீசார் அறிவுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர். போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் […]
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கடைவீதி பகுதியில் தனியார் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இவர் வழக்கம் போல் நேற்று மாலை கடையை சாத்திவிட்டு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்த நிலையில் சட்டர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரனை செய்தார். கடையில் […]
மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை- ஆயுதங்களுடன் வாலிபர் கைது
மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை- ஆயுதங்களுடன் வாலிபர் கைது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் மான் உள்ளிட்ட அரிய வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சில சமூக விரோதிகள் காட்டுக் குள் சட்ட விரோதமாக புகுந்து மான்களை வேட்டையாடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக வனத்துறையினரும் ராஜபாளையம் வனப்பகுதியில் கண்கா ணிப்பை தீவிரப்படுத்தி யுள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வனச்சரக அலுவலர்கள் சக்தி பிரசாத், கதிர்காமன், […]
சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார். விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் […]
பாரபட்சம் காட்டுவதாக புகார்: விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகள் ரகளை
பாரபட்சம் காட்டுவதாக புகார்: விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகள் ரகளை விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு […]