நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதியை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் […]
Day: June 9, 2024
இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம்
இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ‘குற்ற செயலால் உடல் ரீதியிலான பாதிப்பு அல்லது பெரும் பொருள் இழப்பைச் சந்தித்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வழங்குவதே இழப்பீடாகும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. குற்ற வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை 4 […]
மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
மதுரையறுகே மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது மதுரை பேரையூர் சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில், பெரியகட்டளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45),கோடாங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி (30), உசிலம்பட்டி தாலுகா பாரைப்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (41) ஆகியோர் விற்பனை செய்வதற்காக 123 மது பாட்டில்களை கொண்டு சென்றனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை .பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை
ரோடுகளை சீரமைக்க மக்களின் கோரிக்கை திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் ரோடுகளை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர் அங்குள்ள மெயின் தெரு மற்றும் குறுக்குத் தெருகளில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன குண்டும் குழியுமாக உள்ள அந்த ரோடுகளில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வோர் மட்டும் இன்றி நடந்து செல்போரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சிங்கம்புணரியில் தன் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தவர் வீட்டின் மீது 17 வயது சிறுவன் பெட்ரோல் குண்டு வீசினார் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி மகன் முருகன் வயது 38 இவரது அலைபேசியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்ப கொடுக்காமல் சென்று விட்டார் இதுகுறித்து முருகன் சிங்கம்புணரி போலீசில் கடந்த வாரம் […]
மின் திருட்டா? புகார் அளியுங்கள்
மின் திருட்டா? புகார் அளியுங்கள் தமிழக மின்வாரியத்திடம் மின் இணைப்பு பெறாமவ் மின் வினியோக சாதனங்களில் இருந்து சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் வீட்டு பிரிவு மின் இணைப்பு பெற்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துகின்றனர் இது போன்ற மின் திருட்டை கண்டறிந்தால் 94458 57591 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மக்களை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது இது தவிர www.tnebltd.gov.in/petitionentry.xhtml என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது
மின்வாரிய நஷ்டத்தை சரி செய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல பொதுமக்களின் கருத்து
மின்வாரிய நஷ்டத்தை சரி செய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல பொதுமக்களின் கருத்து ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றனர் மின்வாரியத்தின் இழப்பை குறைக்க மின்கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல 2022-ல் 31,500 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்தியும் நஷ்டம் அதிகரித்துள்ளது மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும்.மின் கட்டணம் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதுரையில் 118 தலைமை காவலர்களுக்கு எஸ்.ஐ ., பதவி உயர்வு
மதுரையில் 118 தலைமை காவலர்களுக்கு எஸ்.ஐ ., பதவி உயர்வு மதுரை நகரில் 118 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பணியில் கான்ஸ்டபிளாக சேர்ந்தவர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தால் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., யாக பதவி உயவு வழங்கப்பட்டு வருகிறது இதன்படி 1999 ல் பணியில் சேர்ந்து மதுரை நகரில் பணியாற்றும் 118 ஏட்டுகளுக்கு மே 25க்கு பிறகு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்பட […]
மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள்
மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள் மதுரை நகரில் ஏழு போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர் சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே போலீசாக உள்ளனர் அக் குடும்பங்களில் குழந்தைகளை கண்காணிப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது இது குடும்பத்தின் பெரிய பிரச்சினையாக உருவாக வழி வகுக்கிறது இதை தவிர்க்க கமிஷனராக டேவிட்சன் இருந்த போது ஆனந்தம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது […]
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது மதுரை பாண்டி கோவில் மாட்டுத்தாவணி போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது குறிஞ்சிவளம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர் அவர்களில் ஒருவர் போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் உலகநெறி மனோகரன் வயது 28 வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தது தெரிந்தது.இதை அடுத்து மனோரனை போலீசார் கைது செய்து மேலும் தலை மறைவான மற்றவர்களை தேடி […]