விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களில் தொடர் டீசல் திருட்டு சம்பவம் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட டீசல் கொள்ளையர்களைகையும் களவுமாக பிடித்தார் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.ராமசந்திரன் அவர்கள் இவை மட்டும் அல்லாது இவர் குற்றபிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும்போது பல குற்றங்களை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் வெகுமதியும் பெற்றவர், மேலும் குற்றவாளிகளுக்கு மத்தியில் பெயரை கேட்டால் சிறிது நடுக்கம் காரணம் சிம்ம […]
Month: February 2018
CD மணி கூட்டாளிகளால் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல்?
போலீசாரால் தேடப்பட்டு வரும் தென் சென்னையின் பிரபல ரவுடி C.D. மணியின் கூட்டாளிகளால், தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் செல்போனில் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான கிரி, இரு தினங்களுக்கு முன், குற்றவழக்கு ஒன்றில் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, கணேசனின் தம்பியும், CD மணி என்ற ரவுடியின் கூட்டாளியுமான தவக்களை பிரகாஷ் என்பவன், ஆய்வாளர் கிரியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தன் அண்ணனையே […]
மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி: நிபுணர்கள் நேரில்ஆய்வு செய்தனர் குறித்து ஆய்வு செய்த தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஐ.ஜி அருணாச்சலம், டிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்டோர்.
சென்னை மெரினா கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. போலீஸாரின் விசாரணையில் கடலில் மிதந்த பொருள் கப்பல்களில் பயன்படும் போயோ எனும் மிதவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வழக்கம்போல் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடங்களின் பின்புறப் பகுதியில் ராக்கெட் வடிவிலான மர்மப் பொருள் ஒன்று கடலில் மிதந்தது. இது […]
மதுரை அருகே மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் பஞ்சாலை தொழிலாளி கைது: மலையில் பதுங்கியிருந்தபோது போலீஸ் சுற்றி வளைத்தது
மதுரை அருகே காதலிக்க மறுத்ததால் திருமங்கலம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற பஞ்சாலை தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர் நடுவக்கோட்டை அருகே உள்ள திரளியில் இருக்கும் தனியார் பஞ்சாலையில் வேலை பார்க்கிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இந்த காதலை மாணவி ஏற்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த ஆண்டு […]
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுகாரன்பாளையம் எனும் இடத்தில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுகாரன்பாளையம் எனும் இடத்தில் (TN 37 CW 2301) லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது,அப்போது இளைஞர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில்(TN 37 U 4797) சென்று கொண்டிருந்தன் மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் (TN 37 CG 4105) ஒருவர் சென்று கொண்டிருந்தார்,அப்போது லாரியை கடந்து செல்ல முயலும்போது எதிரே வந்த வாகனம் உரசியதால் நிலைகுலைந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர் மேலும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி […]
கள்ளத் துப்பாக்கி வழக்கில் வடமாநில இளைஞர் கைது: மேலும் சிலரைப் பிடிக்க தீவிர விசாரணை
கள்ளத் துப்பாக்கி வழக்கில் தொடர்புடைய இளைஞரை மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சியில் தங்கியிருந்து கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட முயன்ற சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய காவலர் பரமேஸ்வரன்(32), அவரது உறவினரான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமார் மகன் நாகராஜ்(30), இடைத்தரகராக செயல்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா(32) ஆகியோரை கடந்த மாதம் 27-ம் தேதி கன்டோன்மென்ட் போலீஸார் […]
12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு: 1.செந்தில் வேலன், 2. அவினாஷ் குமார், 3. ராதிகா, 4. ஜெயகவுரி, 5. அஸ்ரா கார்க், 6.ஏ.ஜி.பாபு, 7.பி.கே.செந்தில்குமாரி, 8.ஏ.டி.துரைகுமார், 9.சி.மகேஷ்வரி, 10. ஆசியம்மாள், 11.லலித லட்சுமி, 12.என்.காமினி. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி […]
சென்னையில் கொடூரம்: ஐ.டி. பெண் ஊழியரை தாக்கி வழிப்பறி; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி இடத்திற்கு வந்த சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் சாரங்கன், சென்னை தெற்கு இணை ஆணையர் அன்பு, பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஈசிஆர் சாலையில், ஆந்திர மாநில ஐடி பெண் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கி , அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, விலை மதிப்புள்ள ஐ போன் பறிக்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராதா (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென் பொறியாளரான இவர் சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இவர் நாவலூர் அருகில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
நீலாங்கரையில் தந்தையை கொலை செய்த மகன் கைது
நீலாங்கரையில் குடும்பத்தகராறில் மகன் தாக்கியதில் தந்தை பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து மகனை போலீஸார் கைது செய்தனர். சென்னை, நீலாங்கரை, ராஜேந்திரா நகர், வசித்து வந்தவர் முருகேசன்(60). கடந்த 07-ம் தேதி அன்று இரவு தனது தனது மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தில் மனைவியை தாக்கியுள்ளார். தாயை அடித்ததால் மகன் திருவேங்கடம் தந்தை முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திருவேங்கடம் தனது தந்தை முருகேசனை கையால் தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த முருகேசன் […]
பள்ளிக்கரணையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி கைது
ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்க உடந்தையாக இருந்த பெண் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் சிதம்பரம். இவரது தந்தை சொக்கலிங்கம். இவர்களுக்கு சொந்தமாக பள்ளிக்கரணையில் உள்ள காமகோடி நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 3352 சதுர அடி காலி இடம் உள்ளது. இடத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம் 1995-ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு, கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திர பதிவு […]