Police Department News

திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைப்பில் கிளப்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இந்த போட்டியினை தொடக்கி வைத்தார். இன்று முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஆகிய இரண்டு […]

Police Department News

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு உத்தமராஜா என்ற மகன் உள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் […]

Police Department News

வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி

வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 70-ஆவது தமிழ்நாடு சீனியர் ஆடவர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இச்சாதனையை படைத்த கைப்பந்து அணியினரை நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார். முனைவர்.அபாஷ் குமார், இ.கா.ப., காவல்துறை […]

Police Department News

மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி திடீர் ஆய்வு

மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி திடீர் ஆய்வு தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புக்கள் மற்றும் காவல் நிலைய பதிவேடுகளை டி.எஸ்.பி சிந்து திடீர் ஆய்வு செய்தார்.மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த கோப்புக்களின் நிலையினை ஆய்வு செய்த பாலக்கோடு உட்கோட்ட டி.எஸ்.பி சிந்து ஆய்வின் போது நிலுவையில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்,நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் தீர்வு […]

Police Department News

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை- 50 போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் சோதனை- 50 போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சில கைதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்த செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மதுரை புது ஜெயில் ரோட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு 2500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளிடம் சமீப காலமாக செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை […]

Police Department News

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த முடிவு தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது. இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை […]

Police Department News

மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை

மதுரை அலங்காநல்லூர் அருகே மில் சூப்பர்வைசர் கழுத்தறுத்து கொலை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். நேற்று வேலைக்கு சென்ற பொன்மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே […]

Police Department News

ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது

ஆயுதங்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சேதுபதி என்பவர் மகன் மவுலிகண்ணா (வயது21). இவர் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். அப்போது 3 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதே போல் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த ஜாபர் ெஷரிப் என்பவர் சம்பவத்தன்று இரவு […]

Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில்42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை திருமங்கலம் பகுதியில்42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை அருகே திருமங்கலத்தில் 42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கடை உரிமையாளர் யேசுதாசை கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் யேசுதாஸ்(வயது 53). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட […]

Police Department News

மதுரை சைக்கிள் கடை தொழிலாளியிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்தவர் கைது

மதுரை சைக்கிள் கடை தொழிலாளியிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்தவர் கைது உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு பெண் உள்பட 6 பேர் கும்பல், ரூ.55 லட்சம் மோசடி செய்து உள்ளது. போலீசார் ரூ.55 லட்சம் மோசடி செய்த பாலாஜியை கைது செய்தனர். அவரது மனைவி உள்பட 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மதுரை கோச்சடையை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 51). இவர் முடக்குசாலை, கணேசபுரத்தில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த […]