மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட வாகனங்களை தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு […]
Day: September 21, 2022
மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைதுஅவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரையில் கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 7 பேர் கைதுஅவர்களிடம் இருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரையில் கஞ்சா விற்பனையில் சிறுவர்களும் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். செல்லூர் […]
காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 7 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அனுமதியுடன் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தொலைதூரக் கல்வி நிறுவனத்தை நடத்தினர். அவர்கள் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. மேலும் பரீட்சையில் தோல்வி அடைந்த வர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வெற்றி பெறச் செய்துள்ளனர் என்ற புகார்கள் வெளியானது. இதையடுத்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகள் […]
சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்?
சாலைகளில் வேகத்தடைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க விதி என்ன சொல்கிறது?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, “தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்’ என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, “போக்குவரத்து பொறியாளர்கள் குழு’ கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் […]