50 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டு சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு […]
Day: June 10, 2023
போலி ஆவணம் தயாரித்து பலகோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது
போலி ஆவணம் தயாரித்து பலகோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு- ஜவுளிக்கடை உரிமையாளர் கைது விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன் மேலவண்டல் தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல் ஹக் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிகிறது. முகமது இப்ராகிம் இறந்த சில நாட்களில் அவரே தனக்கு சொத்துக்களை உயில் எழுதி வைத்ததாக அப்துல் ஹக் போலி ஆவணம் […]
யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது
யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார். விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் […]
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு மணிகண்டன் அவர்கள் கடந்த 27.04.2023 அன்று மரணம் அடைந்தார்.. அவரது சக காவல் நண்பர்கள் 2010 காக்கும் கரங்கள் என்ற உதவி அமைப்பின் மூலம் தமிழக முழுவதும் இருந்து அனைவரது பங்களிப்பிலும் சுமார் 16 லட்சம் சேகரித்ததை பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தாருக்கு மதுரை மாநகர […]