உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 வார சிறைத்தண்டனை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற […]
Day: August 3, 2023
மதுரையில் வாலிபரை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர்
மதுரையில் வாலிபரை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் திருப்பரங்குன்றம் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அபிஷேக்(வயது25). இவர் சம்பவத்தன்று விளாச்சேரி கண்மாய்க்கரை சிவன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை மறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. தொடர்ந்து அபிஷேக் வைத்திருந்த 1½ பவுன் செயின், ரூ.10 ஆயிரம் ரொக்கம் […]
ஆட்சி மொழி கருத்தரங்கம்
ஆட்சி மொழி கருத்தரங்கம் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை […]
மணல் திருடிய 4 பேர் கைது
மணல் திருடிய 4 பேர் கைது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வையகளத்தூர் கிராமத்தில் உள்ளது கருவ கண்மாய். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கண்மாயில் அடிக்கடி சவடு மண்களை டிராக்டர், லாரி, மாட்டுவண்டிகள் கொண்டு அள்ளுவதாக கண்டவராயன்பட்டி காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அவர் அதிரடியாக கருவக் கண்மாய்க்கு போலீசாருடன் சென்றார். அப்போது அங்கு ஒரு ஜே.சி.பி. எயந்திரம் கொண்டு 3 டிராக்டர்களில் சவடு மண்ணை அள்ளி கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கீழத்தெரு பகுதியை […]
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் […]
சுரண்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி – தப்பி ஓடிய தொழிலாளிக்கு வலைவீச்சு
சுரண்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி – தப்பி ஓடிய தொழிலாளிக்கு வலைவீச்சு ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வி.கே.புதூர் பகுதியில் தனியாக வீட்டில் இருந்த திருமணமான ஒரு இளம்பெண்ணை அவதூறாக பேசி உள்ளார். மேலும் ஆட்கள் இல்லாததை அறிந்த அவர் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, கதவை தட்டி உள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. […]
சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம்
சர்வீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் விதி மீறியதாக ரூ.1000 அபராதம் தேனி மாவட்டம் போடி மேலதெருவை சேர்ந்தவர் பிரவீன் காந்தி (30). இவர் சொந்தமாக புல்லட் இருசக்கர வாகனம் வைத்துள்ளார். தனது தோட்டத்து விவசாய பணிக்காக இரட்டை வாய்க்கால்-மூணாறு சாலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக இவரது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அதனை சர்வீஸ் நிலையத்தில் பழுது நீக்க நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
மின் கம்பத்தில் கார் மோதி தாய் மகள் காயம்
மின் கம்பத்தில் கார் மோதி தாய் மகள் காயம் கடத்தூர் அருகே கோபிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவடிவேல் மகன் தினேஷ் இவர் தன்னுடைய மனைவியை மருத்துவ பரிசோதனைக்காக கிருஷ்ணகிரிக்கு காரில் அழைத்துச் சென்றார். அப்போது கார் கம்பைநல்லூர் அருகே கடம்பர அள்ளி பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் காரில் இருந்த தினேஷ் மனைவி அருணா, அருணாவின் தாய் இளங்கண்ணி ஆகிய இருவரும் காயமடைந்தனர். காரில் இருந்து […]
செல்போன்களை திருடிய இரண்டு பேர் கைது
செல்போன்களை திருடிய இரண்டு பேர் கைது தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்து தீச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது மனைவி கவிதா இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சிதம்பரம்,இவரது மனைவி மல்லிகா. இந்த நிலையில் சம்பவத்தன்று கவிதா வீட்டில் வைத்திருந்த இரண்டு செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோன்று மல்லிகா வீட்டில் வைத்திருந்த செல்போனையும் அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து கவிதா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் […]