அ.தி.மு.க. மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மதுரை எஸ்.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
Day: August 9, 2023
போக்சோ விசாரணை கைதி திடீர் சாவு
போக்சோ விசாரணை கைதி திடீர் சாவு விருதுநகர மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கொள்ளக் கொண்டான் நக்கனேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் தாசையா (வயது62). இவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப் பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக தாசையாவுக்கு கிட்னி நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்ற உடல்நிலை மோசமாகவே தாசையா […]
அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
அக்னிபாத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கான திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 17-ந்தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களுக்கான இணைய வழி தேர்வு 13.10.2023 அன்று நடத்தப்படும். கடந்த ஜூன் 27, […]
பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் திருடிய சிறுவன்
பாட்டி வீட்டில் ரூ.47 ஆயிரம் திருடிய சிறுவன் விருதுநகர் இந்திராநகர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிறுவன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பெண்கள் சிறுவனுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அன்பாக பேசி பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று 4 பேரும் சிறுவனிடம் பாட்டி வீட்டு பீரோவில் இருந்து பணத்தை திருடு வருமாறு கூறி உள்ளனர். அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் […]
தென்காசி அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை போலீஸ்காரர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை
தென்காசி அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை போலீஸ்காரர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது29). இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி வ.உ.சி. நகரை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகள் குமுதா (23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் சுதர்சன் திருமணம் முடிந்து […]
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள் சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு […]
பெரியகுளத்தில் மகனை அடித்து கொன்றுவிட்டதாக தாய் பரபரப்பு புகார்
பெரியகுளத்தில் மகனை அடித்து கொன்றுவிட்டதாக தாய் பரபரப்பு புகார் பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அழகுமலை மகன் சரவணன்(32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்த சரவணனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சரவணன் மட்டும் பெருமாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரவணன் உடலில் காயங்களுடன் மர்மமான […]