நாட்டின் நலனுக்காக செல்போன் ஒட்டுக்கேட்பு.. அந்த தகவல்களை வெளியிட தேவையில்லை.. டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு டெல்லி: தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் ஒட்டுக்கேட்பது குறித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உத்தரவின் பெயரில் நமது நாட்டில் சிலரது மொபைல் எண்களை அரசே ஒட்டுக்கேட்கும். இதற்கிடையே இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மொபைல் பயனரின் […]
Month: December 2023
புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை
புளியங்குடியில் பரபரப்பு பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை புளியங்குடியில் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து நீரில் முழ்கடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார். மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதியன்று இரவு […]
பெண் IT ஊழியர் எரித்து கொலை – முன்னாள் காதலன் கைது!
பெண் IT ஊழியர் எரித்து கொலை – முன்னாள் காதலன் கைது! பொன்மார் அருகே பெண் மென்பொறியாளர் எரித்து கொலை செய்யபட்ட வழக்கில் முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரியவந்தது. […]
புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு
புழல் மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல்: 8 கைதிகள் மீது வழக்கு புழல் விசாரணை சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன், பேட்டரிகள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என 3 சிறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200 பெண்கள் உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை […]
ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி
ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; மதுபோதையில் தகராறு – கொலை செய்த முதல் மனைவி திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்கர் நகர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஜெ.இ-யாக ஆக பணியாற்றி வருகிறார். இவர் பத்மினி என்ற பெண்ணை கடந்த 25 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், இவரது பெற்றோர் லலிதா என்ற பெண்ணை இவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்துள்ள்னர். இந்நிலையில், அண்ணாதுரை […]
கடலூர்: குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்ட`ஸ்கெட்ச்’ – கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி!
கடலூர்: குவைத் நாட்டிலிருந்து காதலன் போட்ட`ஸ்கெட்ச்’ – கணவனைக் கொலைசெய்து விபத்தாக மாற்றிய மனைவி! கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் – மேல வன்னியூர் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், விபத்தில் அடிப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக, குமராட்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். அதில் சடலமாகக் கிடந்தவர், மேல […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீனிவாச பெருமாள் M.A..MBA அவர்கள் புகையிலை, குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து செய்து கண்காணிக்க உத்தரவிட்டதன் பேரில் நேற்று 23.12.2023 தேதி திருச்சுழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களது தனிப்படையினருக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி எம் […]
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி காவல் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் நடைபெற்றது. காவலர் ராம்குமார் சென்னையில் பணியாற்றியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதேபோல், மதுரையைச் சேர்ந்த காவலர் கணபதி என்பவர் ஜூலை மாதம் சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கு 2009-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் […]
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) ஆலோசனை […]
பொன்னேரி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை
பொன்னேரி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை பொன்னேரி அருகே சிறுவாக்கம், சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி மகன் முரளிகிருஷ்ணன் (24). விவசாயி. இவருக்கும் சோழவரம், ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன் தனலட்சுமிக்கு கர்ப்பத்தை கலைந்துவிட்டது. இதனால் கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளில் திட்டி வந்துள்ளனர். மேலும், […]