திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு
திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கினார்.