National Police News

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி அபகரிக்க முயன்ற பொறியாளர் உட்பட 2 பேர் கைது

இன்போசிஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரம் செய்து ரூ.5 கோடி வரை அபகரிக்க முயன்ற பெண் பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சுகுமாறன் மனைவி மகேஷ்வரி (35). பிஇ பட்டதாரி. இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய பயிற்சி கட்டணத்துடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கடந்த வாரம் செய்தித்தாள் ஒன்றில் விளம் பரம் செய்திருந்தார். இதற்காக தல்லாகுளம் பகுதியிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நவ.16 அன்று […]

National Police News

ரயில் பயணிகளிடம் திருட்டு; 71 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண் கைது: 70 சவரன் நகை பறிமுதல்

ரயில் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பி நகை, பணத்தைத் திருடிய 57 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகை, 77.5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். ரயிலில் வரும் பயணிகளிடம் சாதுர்யமாகப் பழகி அவர்கள் பணம், நகைகளைத் திருடுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையொட்டி தீவிரக் கண்காணிப்பில் இருந்த ரயில்வே போலீஸாரிடம், கடந்த வாரம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் […]

Condolences

கொலை, கொள்ளை வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் சென்னையில் கைது: 15 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை புளியந்தோப்பு போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. கூலிப்படை தலைவ னாகவும் […]

Police Department News

மதுரையில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது

மதுரையில் ரூ.7.62 லட்சம் மதிப் புள்ள கள்ளநோட்டு பண்டலை வீசிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் வெளியூரில் இருந்து வந்த லாரியில் இருந்து குடிநீர் பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்தனர். ரயில் நிலையம் அருகே லாரி நின்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பண்டல் ஒன்றை லாரிக்குள் வீசி விட்டு தப்பினார். இதைக் கவனித்த லாரி ஓட்டுநர் பூபதி, அந்த பார்சலை […]

Condolences

கோவை பீளமேட்டில் 2003-ம் ஆண்டு நடந்த மூவர் கொலை வழக்கில் மீண்டும் விசாரணை?

கோவை பீளமேடு சவுரிபாளை யம் சாலையை சேர்ந்தவர் அமிர்தம் (55). இவரது மகள் கீதாமணி(30), கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் மற்றும் மகள்  ரஞ்சனி(3)யுடன், மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம், அமிர்தம், கீதாமணி, ரஞ்சனி ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாய மாகியிருந்தது. அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்ப வம் தொடர்பாக, ஆதாயக் […]

Condolences

அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் சென்று ஆய்வு செய்தார்.

மூலனூர் அருகே இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாலமேடு கவுண்டப்ப கவுண்டனூர் அருகே இளம் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று ஆய்வு செய்தனர். இதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாயில் துணியை வைத்து அழுத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு, முட்புதரில் உடல் வீசப்பட்டுக் […]

Police Department News

டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ‘ஸ்கோச்’ விருதுகள்

டிஜிபி பிரதீப் வி. பிலிப் 2 ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். காவல் துறை நண்பர்கள் இயக்கம், உங்கள் குற்றவாளிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் திட்டங்களுக்காக இந்த விருதுகள் கிடைத்துள்ளன. மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் சிறப்பு ஜூரிக்கள் மற்றும் வாக்கெடுப்பு முறை மூலம் தேர்வு செய்யப்படும் ‘ஸ்கோச்’ விருதுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அரசின் துறைகளில் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. சென்னை […]

Police Department News

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார். வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார். வழிதெரியாமல்  உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள். ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து  […]

Police Department News

ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு

கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆளிநர்கள் இன்று 18 .11 .19ஆம் தேதிகாலை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரங்களில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவிக்கின்றோம்

Police Recruitment

பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். […]