கரூர் : விவசாயம் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட நபர்கள் கைது கரூர் மாவட்டம்¸ மாமரத்துப்பட்டியில் கஞ்சா செடி பயிரிடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ திருச்சி திருவெறும்பூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே.¸ இ.கா.ப அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ சுமார் 72 சென்டில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. கஞ்சா செடி பயிரிட்ட 2 பேரை கைது செய்யப்பட்டு¸ நிலத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.
Day: November 29, 2019
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் பாதுகாப்பு
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையத் திறப்பு விழா இவ் விழாவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் பெரு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கினர் போலீஸ் இ நியூஸ் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்
விருதுநகர் மாவட்ட செய்திகள்: சிவகாசிதிருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்து5 பெண்கள் பலத்த காயம். பெண் ஒருவர் பலி அதன் விபரம் பின்வருமாறு
விருதுநகர் மாவட்ட செய்திகள்:- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த கனியம்மாள் (55) இறந்தார். மேலும் 5 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக சுத்தப்படுத்தும் பணி கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது மண்டபத்தின் ஒரு தூண் எதிர்பாராதவிதமாக உடைந்து மண்டபத்தின் உணவகம் முழுவதும் […]
சிபிசிஐடி போலீஸார் எனக் கூறி திருப்பூர் வியாபாரியிடம் பணம் பறித்த இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் 3 பேர் கைது: தலைமறைவான 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
சிபிசிஐடி போலீஸார் எனக் கூறி, திருப்பூரில் வியாபாரியை மிரட்டி ரூ.3 லட்சம் பறித்த கும்பலில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வசிப்பவர் டி.ரூடா ராம் சவுத்ரி (36). ராஜஸ்தானை சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டு களாக திருப்பூர் ஓடக்காடு பகுதி யில் மளிகை வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த […]
காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம்: துடியலூர் பகுதிக்குட்பட்ட 30 இடங்களில் அமல் – குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்
குற்றச் சம்பவங்களை தடுக்க, துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதுடன், 6 காவல் நிலை யங்களில் ரோந்து குழுவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தில் 5 உட்கோட்டங்களும், 35 காவல் நிலையங்களும் உள்ளன. அடிதடி, திருட்டு, தகராறு, வழிப்பறி, கொள்ளை உட்பட பல்வேறு புகார்கள் தொடர்பாக, மாவட்டப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். […]
அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தி. நகரைச் சேர்ந்த தொழிலாளி கைது
தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தி.நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் அமைந்துள்ளது அண்ணா அறிவாலயம். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர்கள் பயன்படுத்தும் அலுவலகம், கூட்ட அரங்கு, நிர்வாக அலுவலகம், திருமணமண்டபம், நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்கள் உள்ளன. கட்சித்தொண்டர்கள், தலைமை அலுவலக நிர்வாகிகள், செய்தியாளர்களால் நிரம்பி வழியும் அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு வந்த மிரட்டல் போன்கால் […]
மதுபோதை தகராறு மரணத்தில் முடிந்தது: நண்பரைக் கொன்றவர் கைது
மதுபோதையால் நடக்கும் கொலைகள் அங்காங்கே அதிகரித்து வரும் நிலையில் சென்னை கே.கே.நகரில் ஒன்றாக மது அருந்திய நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாட்டிலால் குத்தப்பட்ட நண்பர் பலியானார். சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலை ஜங்கஷன் அருகில் சாலையோரம் குடியிருப்பவர் கீரித்தலையன் (எ) சிவகுமார்(38). இவரது நண்பர் ராபர்ட்(40). இருவரும் கட்டடத்தொழிலாளர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்ட இடத்தில் அனைவரும் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். வேலை முடிந்தவுடன் ஓய்வு நேரத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது […]
வழிப்பறி செய்து சிக்காமல் இருக்க போலீஸ் சிசிடிவி கேமரா உடைப்பு: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
ஓட்டேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் சிசிடிவி கேமரா இருந்தால்தானே தம்மை அடையாளம் கண்டு போலீஸார் பிடிப்பார்கள் என சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஓட்டேரி சந்திரயோகி சமாதி தெருவில் வசிப்பவர் முனுசாமி(36) .இவர் இப்பகுதியில் நேற்றிரவு வந்தபோது ஒரு கும்பல் இவரை தாக்கி, கத்தியைக்காட்டி மிரட்டி கையிலிருந்த ரூ.1200- ரொக்கப்பணத்தைப் பறித்துச் சென்றது. அப்போது அந்த கும்பலில் ஒருவன் அங்குள்ள சிசிடிவி கேமராவைக்காட்ட அங்கிருந்த 6 சிசிடிவி காமிராக்களைக்கண்ட […]
காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா.
காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா. சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் […]
சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சி பயிற்றுனர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழாவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தொடக்கி வைத்து சான்றிதழ்கள் வழங்கினார்.
கடந்த வருடம் 16.11.2018 அன்று முதல் பெங்களூரில் நடைபெற்ற NIMHANS சென்னை பெருநகர காவல் நிறைவாழ்வுப் பயிற்சியை ஓராண்டுகால முடித்தவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா சென்னை பெருநகர ஆணையரகத்தில் 25.11.2019 துவங்கி 26.11.2019 வரை 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சியளராக காவல் ஆய்வாளர்கள் K.A பார்வதி, CCB, G.G.பிரசித் தீபா,D6 அண்ணா சதுக்கம் PS, P. சாந்தி தேவி,V-1 வில்லிவாக்கம் PS(crime), G.கீதா,CCB, K. ஷோபா ராணி,W-29 ஆவடி AWPS, R. நவரத்தினம் […]