மலையில் மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர். 28.11.2019 மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் எதிர்பாராதவிதமாக அருகில் வந்த காளை மாடு ஒன்று சக்தி கிரிதரன் வலது பக்க தொடையில் குத்தியதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது, இதனால் அவர் மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார். […]
Day: November 30, 2019
திருச்சி காவல் ஆணையர் உள்ளிட்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்
திருச்சி காவல் ஆணையர் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். எஸ்பி அந்தஸ்து அளவிலான அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் ஏடிஜிபி, டிஜிபி அளவிலும் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கின்றனர். இன்று ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம் […]
பீளமேடு அருகே வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது
பீளமேடு அருகே வீடு புகுந்து நகை, பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். கோவை மாநகர் பீளமேடு விமான நிலையம் அருகே பிருந்தா வன் நகரைச் சேர்ந்த தம்பதி தினேஷ்குமார் (27), சவுமியா (25. இருவரும் மென்பொருள் பொறி யாளர்களாக பணிபுரிந்து வருகின் றனர். மேற்கண்ட முகவரியில் தினேஷ்குமார், சவுமியா, மாமியார் ராணி (50) ஆகியோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், ராணியின் கழுத்தில் இருந்த […]
தலைமறைவான மாவோயிஸ்ட்களை தேடும் பணி தீவிரம்: தமிழக – கேரள எல்லையில் போலீஸார் வாகன சோதனை
பொள்ளாச்சி – பாலக்காடு சாலை கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸார். தலைமறைவான மாவோயிஸ் ட்களை தேடும் பணியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் தமிழக – கேரள எல்லையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் தளம் அமைத்து செயல்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை ஒடுக்க, அம்மாநில அரசு தண்டர்போல்ட் எனும் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியது. தண்டர் போல்ட் நடத்திய தாக்குதலில், 2016-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத் […]
திருச்சி மாநகர காவல் ஆணையராக வரதராஜு நியமனம்!திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜுவை நியமித்து
திருச்சி மாநகர காவல் ஆணையராக வரதராஜு நியமனம்!திருச்சி மாநகர புதிய காவல் ஆணையராக வரதராஜுவை நியமித்து தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மத்திய மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுளளார். அதனை தொடர்ந்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சிபிசிஐடி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையராக தேஷ்முக் சேகரை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக ஜெயராம் நியமிக்கப்பட்டுளளார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 30- ந்தேதி 83- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டர்
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவம்பர் 30- ந்தேதி 83- வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை வழங்க உள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிதம்பரத்திற்கு 29- ந்தேதி வெள்ளி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் வந்தார். இவரை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், தென்னக ரயில்வே திருச்சி மண்டல காவல் […]
தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய காவலர்
கோவை மங்களூர் ரயிலில் இருந்து, தவறி விழ இருந்த பயணியை, பாத்திரமாக ஏற்றி விட்ட ரயில்வே தலைமை காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவையில் இருந்து மங்களூர் செல்லும், கோவை – மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையம் நடைமேடை எண் 3 ல் இருந்து, காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட ரயிலில் மங்களூர் செல்ல வந்த கனவன், மனைவி, மகன் என ஒருகுடும்பத்தினர், ஓடும் ரயிலில் பைகளுடன் ஏற முயன்றனர். […]