ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரா ரெட்டி என்பவர் தனது மகன் மற்றும் மனைவியுடன் சங்கரன்கோவில் கிராமத்தில் வேலைக்காக பெயர் தெரியாத நபர் வரச் சொல்லி வந்துள்ளார். வந்த இடத்தில் பணம் ருபாய் 7,000 மற்றும் செல்போன் – ஐயும் Miss பன்னிவிட்டார். வழிதெரியாமல் உத்துமலை வந்து இறங்கியுள்ளார்கள். ஊத்துமலை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் (ஜெய்சங்கர்) மற்றும் காவலர்கள் மேற்படி நபரை குடும்பத்தோடு நிலையம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தனது சொந்த பணத்தை பிரித்து […]
Day: November 18, 2019
ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவல் ஆளிநர்கள் இன்று 18 .11 .19ஆம் தேதிகாலை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரங்களில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக மெகாபோன் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவிக்கின்றோம்
பெண்ணை தாக்கியதாக சிதம்பரம் கோயில் தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்ணை தாக்கியதாக தீட்சிதர் மீது போலீ ஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதியின் மனைவி லதா (51). காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகி றார். இவர் தனது மகன் ராஜேஷ் (21) பிறந்த நாளையொட்டி நேற்று முன்தினம் இரவு நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளார். […]
காதலிக்க மறுத்ததால் ஆவேசம்: சிதம்பரம் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது
சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். காடாம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மகள் தன லட்சுமி (19). இவர் சிதம்ப ரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் அவரது பாட்டி ராதா வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களமரு தூர் மாரியம்மன் கோயில் தெரு வைச் சேர்ந்தவர் […]
காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டி: பிடி தவறி கீழே விழுந்த 2 இளைஞர்களின் கைகளில் எலும்பு முறிவு
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் தவறி கீழே விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு இடது கை எலும்பு முறிந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தற்போது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் […]