தேனி மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நாளை புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 1915 ஆண்கள் மற்றும் 982 பெண்கள் மொத்தம் 2,597 நபர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு நாளை முதல் 8-ஆம் தேதி வரை உயரம், எடை, மார்பளவு […]
Day: November 5, 2019
டெல்லியில் சீருடையுடன் போலீசார் திடீர் போராட்டம் …
டெல்லியில் தொடர் மோதல் போக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி காவல்துறை தலைமையகத்தை போலீசார் முற்றுகையிட்டனர். கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. இதேபோல் நேற்றும் கர்கர்டூமா ((karkardooma)) நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. மேலும், போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் […]