`கூட்டு பலாத்காரம்; புதைக்கப்பட்ட உடல்!’ – 7 ஆண்டுகளுக்குப் பின் வெளியான அதிர்ச்சித் தகவல்நண்பர்களோடு சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து புதைத்தவர் 7 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். அவர் காட்டிய இடத்தில், புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன நெல்லை லாலுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜெயராம். இவர் கடந்த 5-ம் தேதி டவுன் தொண்டர் சன்னதி அருகில் உள்ள பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செபஸ்தியார் கோவில் தெருவை […]
Day: November 23, 2019
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகேயுள்ள கருந்தேவிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் முருகேசன், 45. திருமணமாகாதவர். பெற்றோர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.கடந்த, 18ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு, உள்தாழிடப்பட்டிருந்தது. வெள்ளகோவில் போலீசார், வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது, முருகேசன் இறந்துகிடந்தார். அருகில், மின் ஒயர் இருந்தது. மின்சாரம் தாக்கி, இரண்டு, மூன்று நாட்கள் முன்பே, அவர் இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
கடுமையான காவல் பணியிலும் பொதுமக்களின் நலனில் திருநெல்வேலி போலீசார்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி-சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக ஆங்காங்கே விபத்து ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனை சரிசெய்யும் நோக்கத்தில் 18.11.2019 -ம் தேதியன்று புளியங்குடி காவல்துறையினர் நகராட்சி உதவியோடு சாலையில் உள்ள பள்ளங்களில் கற்கள் கொண்டு நிரப்பி சாலைகளை சீரமைத்தனர். கடுமையான பணியின் இடையிலும் மக்களுக்காக சாலைகளை சீரமைத்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிவந்தவர்களைநிறுத்திய, போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்
துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்…
இராமநாதபுரம் பிப்ரவரி 2 தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். இவர்களுடன் வாடகைக்கு வீடு கொடுத்த பெண் உறவினர்கள் போல அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே […]
கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட் தீபக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப் பட்டார். தமிழகம் – கேரளாவின் எல்லைப் பகுதியில், சத்தியமங்கலம் சிறப் புக் காவல் படை, நக்சல் தடுப் புப் பிரிவு காவல் துறையினர் எஸ்.பி மூர்த்தி தலைமையில் கடந்த 9-ம் தேதி ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேடப்பட்டு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (எ) சந்துரு (31) பிடிபட்டார். தப்பிக்க முயற்சித்தபோது, அவரது காலில் அடிபட்டது. கோவை […]
மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய போலீசார்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி வந்த இடத்தில் தான் வைத்திருந்த பணம் 7000 ரூபாய் மற்றும் செல்போனை தவற விட்டுள்ளார். பின்பு வழி தெரியாமல் ஊத்துமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் விசாரணை செய்து காவல் நிலையம் அழைத்து வந்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் […]
காவல் நிலையம் ஆண்டு விழாவில் அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு காவல்துறை சார்பில் உதவிகள்
புதுக்கோட்டை மாவட்டம்¸ நகர காவல் நிலையம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 90 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 91-ம் ஆண்டு விழா காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், வெந்நீர் பயன்படுத்தும் வகையிலான சுமார் 25 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம் மற்றும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.