இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகனேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் திரு. சுப்பையன் அவர்களின்ஆலோசனையின் பேரில் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுகுமார், திரு. சதாசிவம், திரு.சத்தியமுர்த்தி..அவர்கள் 144 தடை உத்தரவு மீறி வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் மீண்டும் தமிழ்நாடுஅரசு உத்தரவின பேரில் வாகனங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிகொடுக்கப்பட்டன. ஈரோடு […]
Month: April 2020
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர்.
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநரான பணிபுரியும் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை […]
முதியவரிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது…!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து 13.04.2020 அன்று சேகர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். […]
வெளியே சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை..
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே […]
கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு.
கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு இராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவருக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. இருப்பினும் 14 நாட்கள் தனிமை படுத்த வேண்டிய நிலையில் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளார். இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உள்ளதாக தெரியவந்த […]
காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர்
காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகள் மூடி இருக்கும் நிலையில் இறைச்சிக் கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என்ற […]
திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது
திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. உடன் தலைமை காவலர்கள் திரு. தண்டபாணி திரு. ராஜ்குமார் திரு.பால் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் செயலை செய்த காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். போலீஸ் இ நியூஸ் மு. […]
காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…!
காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…! கரோனா பணியில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கடைகளில் மாமூல் கேட்டு வாங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஸ்ரீபிரியாவுக்கு சீர்காழி பகுதியில் கரோனா பாதித்தவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் […]
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக கருகம்பத்தூர், சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி
ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வரைவோலையை இன்று 17/04/2020 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களிடம் வழங்கினார். இவரது நற்செயலை கண்டு காவலர் சமூகம் மற்றும் அனைத்து குழுக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.