விருதுநகர் மாவட்ட செய்திகள்:- கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச உதவிகள்… நாடுதோறும் தமிழகம் முழுமையும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், ஊர்களில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவித நிகழ்விற்கும், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய பொறுப்பாக இருந்துவருகின்றது,இவர்களைப்போலவே மற்ற ஏனைய அரசு ஊழியர்கள் இருந்தாலும் அவர்கள் கடமையை கடமைக்காக மட்டுமே செய்ய முடியும் அவ்வளவேதான் செய்யஇயலும் அது அவர்களின் தவறல்ல அது அவர்களின் நிலை (எல்லை வரையறை). […]
Month: April 2020
நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் – காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..!
நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் – காவல்துறையினருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்திய பாட்டி..! கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க அரசு விதித்த 144 தடை உத்தரவின்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு அதே பகுதியில் காய்கறி விற்பனை செய்யும் ராஜம்மாள் என்ற மூதாட்டி ஆரத்தி எடுத்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]
ஊரடங்கின்போது ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய மதுரை காவல்துறை
கரோனா ஊரடங்கால் தவித்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மதுரை காவல்துறை வழங்கியது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சக்கி மங்கலம், எல்கேடி நகர், கண் பார்வையற்றோர் காலனியில் வசிக் கும் முதியோர், ஆதரவற்ற 20 ஏழை குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் உட்பட 15 வகையான காய் கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூடுதல் எஸ்பி வனிதா […]
மங்காத மனிதநேயத்தின் மாண்பு; கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த காவலருக்கு வைகோ போனில் பாராட்டு
சாலையில் கவலையுடன் நடந்துச் சென்ற கர்ப்பிணிப்பெண்ணின் நிலையை விசாரித்து அறுவை சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்த காவலரின் செயலைக்கண்டு நெகிழ்ந்துப்போய் தன் கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவலர் சையது அபுதாகீர் சாலையில் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அவரது நிலையறிந்து அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தத்தை தானே கொடுத்துள்ளார். தக்க சமயத்தில் கொடுத்த ரத்தத்தால் அறுவைச் சிகிச்சை நடந்து அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் F-4 கவரப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து மக்களுக்கு உணவு அளித்த காவல்துறையினர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி கும்முடிபூண்டி ஆய்வாளர் அவர்களின் தலைமையில்அடுத்த F-4காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.இ. சிவராஜ் உதவியோடு சிறந்த முறையில் அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்கள்
விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்
விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர். திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான குரங்குகள், மயில்கள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி அழிந்து வருவதாகவும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்வதால் அங்கு சில மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர் […]
தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர்
தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்கள் 144 ஊரடங்கு உத்தரவினால் தமிழகம் முழுவதிலும் 3200 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையிலிருந்து ஒவ்வொரு முகாம்களுக்கும் Police Liaison Officer -கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் பணியாளர்களுக்கு உணவு, சுத்திகரிப்பான்கள், மருத்துவ வசதி ஆகியவை சரியாக கிடைக்கப்பெறுகின்றனவா என ஆய்வு செய்து, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்து விலகியிருத்தலை […]
ஏழ்மையான 25 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரசி வழங்கிய மனிதநேயம் கொண்ட உதவி ஆய்வாளர்
ஏழ்மையான 25 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரசி வழங்கிய மனிதநேயம் கொண்ட உதவி ஆய்வாளர். சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி திருப்பத்தூர் உட்கோட்டம் S.V மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் தலைமையில் காவல்நிலையம் சார்பாக அப்பகுதியில் உள்ள மிகவும் ஏழ்மையான 25 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மாஸ்க் வழங்கினார். இந்தப் பொருள்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அப்பகுதி […]
துப்புரவு பணியாளருக்கு கவுரவம்
. கொரனான வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் தனது பணியினை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு திருப்பூர் மாநகர பகுதியில் வேலை செய்த துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் மாநகர வடக்கு சரக உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்கள் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கணேசன் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை போற்றும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போற்றி மளிகை பொருட்களை வழங்கினர். இதனால் பணியாளர்கள் […]
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பான் பாதை அமைப்பு: எஸ்.பி ஆய்வு
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3-வது மைல் அருகில் உள்ளது. இங்கு 392 குடியிருப்புகள் உள்ளன. ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். மேலும் குடும்பத்தார் அனைவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர். ஏற்கெனவே குடியிருப்புகளின் நுழைவாயிலில் கரோனா தடுப்பு […]