வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கான கரோனாபரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் […]
Day: May 9, 2020
மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது
மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் போலீஸார் நேற்று மாலை சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களைப் பிடித்து போலீஸார் […]