மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய பகுதியில் செய்தித்தாள் பார்சல்களை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது 48. இவர் 15 ஆண்டுகளாக நாளிதழ்கள் விற்கும் முகவராக உள்ளார். தினமும் இவர் வினியோகம் செய்ய வேண்டிய செய்தித்தாள் பார்சல்கள் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவு 3:00 மணிக்கு வரும். நேற்று காலை வந்து […]
Month: September 2022
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை மேற்கொண்டனா். […]
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரி வீட்டில் நகை பணம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள பெத்தனசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பாண்டி குடும்பத்துடன் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் […]
பைனான்ஸ் அதிபரின் மகனை 1 கோடி கேட்டு கடத்திய கும்பல் 15 மணி நேரத்தில் மீட்ட பாலக்கோடு காவல்துறையினர்
பைனான்ஸ் அதிபரின் மகனை 1 கோடி கேட்டு கடத்திய கும்பல் 15 மணி நேரத்தில் மீட்ட பாலக்கோடு காவல்துறையினர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பிளஸ் 1 முடித்துள்ள மகன் ஷியாம்சுந்தர் (17) பாலிடெக்னிக் படிப்பதற்காக குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 20 தேதி ஷியாம்சுந்தர் பாலக்கோடு கடைவீதிக்குச் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டி.ஜி.பி., அலுவலகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் மனுக்கள் வாங்கினார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டி.ஜி.பி., அலுவலகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் மனுக்கள் வாங்கினார் சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்திருந்தார். அங்கு முதல்வருக்கு காவல் துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், டிஜிபி வளாகத்தில் மகிழம் மரக்கன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார். மேலும், “உங்கள் துறையில் முதல்வரின்” திட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். அவர்களின் […]
டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைக்காமல்180 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தவிப்பு
டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைக்காமல்180 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தவிப்பு தமிழக காவல் துறைக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் அடுத்த 10 ஆண்டுகளில் டி.எஸ்.பி. பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1977ல் நேரடி தேர்வு மூலம் 750 பேர் போலீஸ் எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 570 பேருக்கு மட்டும் டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள […]
மதுரையில் ஆட்டோவில் வந்த வியாபாரியை தாக்கி பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
மதுரையில் ஆட்டோவில் வந்த வியாபாரியை தாக்கி பணம் பறித்த ஆட்டோ டிரைவர் கைது மதுரை வில்லாபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த அப்துல் கனி மகன் அப்துல் நாசர் (வயது 21). இவர் வில்லாபுரத்தில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வெளியூருக்கு சென்று விட்டு வசூல் பணத்துடன் மாட்டுத்தாவணிக்கு வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்துல் நாசரிடம் பணம் இருப்பது டிரைவருக்கு தெரிய வந்தது. அந்தப் பணத்தை பறிக்க […]
12 பவுன் நகை திருடிய கார் டிரைவர் கைது
12 பவுன் நகை திருடிய கார் டிரைவர் கைது மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பாண்டியன் மின்வாரிய அதிகாரி. இவரது தங்கை செல்வநயகி. இவர் மதுரை பரசுராமன்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவரது காரில் வீட்டுக்கு பொருட்களை ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை காணவில்லை. இதுபற்றி திருத்தங்கல் போலீசில் சண்முகப்பாண்டியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்தான் நகையை திருடியது […]
ரயில்வே பாதுகாப்பு படைதினம் கொண்டாட்டம்
ரயில்வே பாதுகாப்பு படைதினம் கொண்டாட்டம் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை தினவிழா கொண்டாடப்பட்டது. ரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக 1872 ல் துவங்கப்பட்ட செக்யூரிட்டி படை 1985 செப்.,20ல் ரயில்வே பாதுகாப்பு படையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் யோகா, ஒற்றுமை ஓட்டம், ரத்ததானம், மரக்கன்று நடுதல், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்தல் நிகழ்ச்சிகளை நடத்தினர். கோட்ட கமிஷனர் அன்பரசு, உதவி கமிஷனர் சுபாஷ், ரயில்வே பாதுகாப்பு […]