புறம்போக்கு நிலத்திற்காக அடிதடி… கட்டட தொழிலாளி படுகொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்…! திண்டுக்கல் அருகே புறம்போக்கு நிலத்தை யார் பயன்படுத்துவது என்ற முன்விரோதத்தில் சித்திக்கு ஆதரவாக இருந்த கட்டிடத் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வன்னிய பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெரியசாமி. சில மாதங்களுக்கு முன்னர் பெரியசாமியின் சித்தி மருதாயி என்பவருக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் புறம்போக்கு […]
Month: January 2024
அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பசுமை தீர்ப்பாயம்
அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பசுமை தீர்ப்பாயம் சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்து கடந்த 27-ந் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் ஏராளமான […]
சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்
சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம் சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி, பாலுதாங்கரை பகுதியில் வசிக்கும் தமிழ் இலக்கியா என்பவர், வழக்கம்போல் காலையில் உணவு தயாரிக்க, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டரில் தீப்பற்றியுள்ளது. சாக்கை எடுத்து தீயை அணைக்க முயன்றபோது தீ அதிகம் பரவியுள்ளது. இதையடுத்து தமிழ் இலக்கியா, அவரது மகன், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டைவிட்டு அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் […]
விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் ஒளிரும் வில்லைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பில் ஒளிரும் வில்லைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அவரவர் வேண்டுதலுக்காக பக்தர்கள் பலரும் பல்வேறு ஊர்களிலில் இருந்தும் அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் வழக்கமாகும். அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு சாலையில் பாதுகாப்பாக செல்வதற்கு இருளில் ஒளிரும் வகையில் வில்லைகளை அவர்கள் கொண்டு செல்லும் உடமைகளில் ஒட்டியும் பாதுகாப்புடன் செல்லுமாறு அறிவுரைகளை எடுத்துக்கூறி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்வேலன் அவர்கள் வழியனுப்பி வைத்தார். அத்துடன் சார்பு ஆய்வாளர் மற்றும் […]
திருச்சுழி காவல் உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின் புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு.முத்துக்குமார் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.
விருதுநகர் மாவட்டம்:- திருச்சுழி காவல் உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின் புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு.முத்துக்குமார் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து நரிக்குடி காவல் நிலைய சரக காவல் ஆய்வாளர், மற்றும் சக காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், என அனைத்து தரப்பினரும் அவரது பணி சிறக்க தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்தி உதவிS.ரெங்கசாமி
19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு!
19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ‘பதவி உயர்வு’.. 2 பேர் ஏடிஜிபி.. புத்தாண்டு பரிசு கொடுத்த தமிழக அரசு! சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்க நாளான இன்று, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா […]
கும்பக்கரை அருவியில் பயணி தவறவிட்ட தங்கமோதிரத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த வனத்துறை
கும்பக்கரை அருவியில் பயணி தவறவிட்ட தங்கமோதிரத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த வனத்துறை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் […]