அன்று பட்டாக்கத்தியுடன் வீரவசனம்; இன்று மன்னிப்பு!’ – சி.சி.டி.வி-யால் சிக்கிய ரவுடிக் கும்பல் சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் சாலையில் சென்றவர்களைப் பட்டாக்கத்தியைக் கொண்டு மிரட்டிய ரவுடிக் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் சில தினங்களுக்குமுன் போரூர் சமயபுரம் 5-வது தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. நிர்வாணக் கோலத்தில் சுற்றித் திரியும் வாலிபர் ஒருவர், ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடிப்பது, தன்னுடைய முகம் சிசிடிவியில் தெரியாமலிருக்க கேமராவைத் திருப்பி […]
Month: November 2019
இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்!’- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி
இன்பி கம்பெனிக்குச் சிக்கல் வந்தா எல்ஃபின்!’- திருச்சி வி.சி.க பிரமுகரின் வில்லங்க மோசடி ஆன்லைன் மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ் பெயரில் 4.63 கோடி ரூபாயை மோசடி செய்த புகாரில் வி.சி.க மாநில நிர்வாகி சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த காக்கிவாடன்பட்டி, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பட்டாசு தொழிற்சாலை நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த அழகர்சாமி என்ற ராஜா, மற்றும் அவரின் தம்பி எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் ஆகியோர் நடத்திவந்த,இன்பி கேலக்ஸி […]
கிண்டி காவல் நிலையத்தில் காணாமல் போன காவலரின் பைக்: போதையில் திருடிய தனியார் வங்கி மேலாளர் கைது
கிண்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய தனியார் வங்கி மேலாளர், தனது மோட்டார் சைக்கிள் என நினைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆலந்தூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பரங்கிமலை ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றுகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த வாரம் கிண்டி காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட தனது பல்சர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு […]
புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி. பேச்சு!
அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி. பேச்சு! புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.வெ.அருண்சக்திகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கிப் பேசினார். மேலும் அரசுப் பள்ளிகளில் […]
சாலை விதிமீறல் தொடர்பாக அபராதம் வசூலிக்க மதுரை நகர் போலீஸாருக்கு மேலும் 50 இ-சலான் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் போலீஸார் வாகன சோதனையின்போது வெளிப்படையாக இருக்கும் வகையில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ-சலான் இயந்திரம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்து அபராதத் தொகையை போலீஸார் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வாகன உரிமையாளர் யார்?, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா?, திருட்டு வாகனமா? என்பன உட்பட பல் வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கார்டு மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு இ-சலான் ரசீது வழங்கப்படும். […]
ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை!
ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை! வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. இந்நிலையில் நவம்பர் 26- ஆம் தேதி மாலை சதீஷ் மற்றும் அவரது தம்பி வினோத் இருவரும் தங்களது குடும்பத்துடன் வேண்டுதல் நிறைவேற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். நவம்பர் 27- ஆம் […]
`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர்
`ஏன் உத்து உத்துப் பார்க்கிறீங்க; இது நவீனரக துவரைச் செடி!’- 2 ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட கரூர் ஆசாமி கரூரில் விவசாயத் தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடியை போலீஸார் அழித்தனர். கரூர் மாவட்டம் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவருக்கு மைலம்பட்டி டு குளித்தலை செல்லும் சாலையில் விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தைக் கவனிக்கும் பணிகளை அவரது உறவினரான நிஜாமுதீன் கவனித்து வந்தார். இவர்களுக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை கடவூர் சின்னவேடப்பட்டியைச் சேர்ந்த அருணாசலம் […]
ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி
ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு […]
கரூர் : போக்குவரத்து விதிகளை படங்களாக வரைந்த மாணவ – மாணவிகள் – பாராட்டி பரிசளித்த காவல் கண்காணிப்பாளர்
கரூர் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ – மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுப் போட்டிகள் 23.11.2019ம் தேதியன்று காவல்துறை சார்பாக நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகள் பற்றி எடுத்துரைத்து¸ வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும் விளக்கமும்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தை 27.11.2019 ம் தேதி பார்வையிட்டனர். மேலும் இவர்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு மாவட்ட காவல் அமைப்பு செயல்படும் விதம் குறித்தும், கட்டுப்பாட்டு அறையின் பணிகள் குறித்தும், காவலர்களின் பணிகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்கள் […]