ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.58 கோடியே 97 லட்சம் செலவில் தியாகராய நகரில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் மற்றும் நவீன சாலைகளை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் இயந்திரம் சாரா போக்குவரத்துக் கொள்கை கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கை அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற வர்த்தக சின்னமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரை மேம்படுத்த சென்னை […]
Day: November 14, 2019
தொழிலதிபரை மீட்ட வேலூர் மாவட்ட காவல்துறையினர்
வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் இரண்டரை லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காததால் 06.11.2019 அன்று ஆரணியில் இருந்து காரில் கடத்தப்பட்டார். உடனடியாக, ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவலர் திரு சதீஷ் அவர்கள் விரைந்து செயல்பட்டு காரை மடக்கி பிடித்து தொழிலதிபரை மீட்டார். விரைந்து செயல்பட்ட காவலரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் […]
குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019) நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட நமது செய்தியாளர் R. விஷால்