கோவையில் மூதாட்டி கொலை வழக்கை துரித விசாரணை செய்யாத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து மாநகர ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றியவர் செந்தில்குமார். கடந்த ஜீன் மாதம் கோவை ம.ந.க வீதியில் ரங்கநாயகி (71) என்ற மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய கணவர் சுப்பிரமணி கடைக்கு சென்ற சில மணி நேரத்திற்குள் மனைவி இறந்தது குறித்து வெரைட்டிஹால் ரோடு காவல் நிலையத்தில் […]
Day: December 2, 2019
வாகனச் சோதனையில்காவலர் மீது வேன் மோதல் தூக்கக் கலக்கத்தில் ஓட்டி வந்ததால் விபத்து
கடற்கரைச் சாலையில் தூக்கக் கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புதுப்பேட்டையில் வசிப்பவர் பால் செல்வம்(26). 8-வது பட்டாலியன் ஆயுதப்படையில் காவலராக உள்ளார். நேற்றிரவு கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பால் செல்வமும் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இரவு 12-30 மணி அளவில் பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அதை பால் […]
பள்ளி கல்லூரி மானவிகளே உஷார், உடன் பயிலும் சக மானவர்களே மானவியை பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது
கோவையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல்(22), பிரகாஷ்(22),நாராயணமூர்த்தி(32),கார்த்திகேயன்(22) ஆகியோருடன் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 26.11.2019 அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வெளியில் சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியை […]
வெவ்வேறு கையெழுத்தில் 3 பக்க டைரி விஸ்வரூபம் எடுக்கும் புதுச்சேரி உதவி ஆய்வாளர் மர்ம மரணம்..
புதுச்சேரி நெட்டப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் கடந்த 21-ம் தேதி காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஓய்வறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறையினர் கூறிவரும் நிலையில் அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் கூறி வருகிறார்கள். உடலை வாங்க மறுத்து சாலை மறியல் புதுச்சேரியை உலுக்கிய இந்தச் சம்பவத்தையடுத்து, அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் கொடுத்த அழுத்தத்தால்தான் விபல்குமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறிய உறவினர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை […]
`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!’- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக்
`கணக்கு வராது; செக்யூரிட்டிக்கு செல்ஃபி சர்ப்ரைஸ்!’- சென்னை போலீஸ் கமிஷனரின் 40 வருட ஃப்ளாஷ்பேக் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தன்னுடைய மலரும் நினைவுகளை சக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் பள்ளியில் 1979-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 1979-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு […]
மான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்!
மான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்! புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் என்கிற ராபின்சன் 3 துப்பாக்கிகள் வைத்துக் கொண்டு வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் மான் வேட்டையாடி விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மான் வேட்டை முடிந்து ஊருக்கு வந்த போது ஒரு விபத்தில் அவரது கார் சிக்கிக் கொண்டதால் திருக்கோகர்ணம் போலீசார் காரை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது காரில் ரத்தக் கறையும், துப்பாக்கி குண்டுகளும் காணப்பட்டது. அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் […]
என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே’ – கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை
என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே’ – கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் இரண்டு பெண்களுக்குள் நடந்த தகராறில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இரண்டு பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, திடீரென ஒரு பெண், இன்னொரு பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தார். ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் கதறி துடித்தார். அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு பயணிகள் அனைவரும் கூடினர். […]