சென்னையில் காவலன் செயலி மூலம் நீதிமன்ற பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவர்கள் அருள்குமார், ஆனந்தராஜ் மற்றும் பொன்மணிமாறன் ஆகியோர் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு செல்லும் 15 ஜி பேருந்தில் ஏறியுள்ளனர். மதுபோதையில் இருந்த மூவரும், பேருந்திலிருந்த பெண் ஒருவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது செல்போனில் இருந்த காவலன் செயலி மூலம் அந்த பெண் […]
Day: December 21, 2019
ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு
நேற்று (20.12.2019) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். மேலும் காவலர்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். காவலர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உடைமைகளையும் சரிபார்த்தார். மற்றும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். காவலர்கள் பணியில் சோர்வடையாமல் உற்சாகமுடனும் நேர்மையாகவும் மதுரை மாநகர பொதுமக்களுக்கு முழு மனதுடன் சேவை செய்யவேண்டும் என்றும் மதுரை மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும், […]
காவலன் “SOS” APP குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP திரு. பவன் குமார் IPS அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி மாணவிகள் 2,000 பேர் கலந்து கொண்டனர். 500 மாணவிகள் காவலன் APP SOS DOWNLOAD செய்தனர். பெண்கள் பாதுகாப்பு, ஆபத்து நேரங்களில் […]
காணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
நேற்று (19.12.19) மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் அவர்கள் பெற்றவர்கள் கொடுத்த புகாரின் பேரில் Girl Missing வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி காணாமல் போன மூன்று சிறுமிகளையும் விரைவில் கண்டுபிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவிட்டார்கள். அதன் பேரில், காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.கார்த்திக்,IPS., அவர்களின் வழிநடத்துதலின் […]
முதலுதவி பயிற்சி வகுப்பு
முதலுதவி பயிற்சி வகுப்பு : திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
“162 வழக்குகள்; மூன்றரைக் கிலோ தங்கம்” – செல்போனில் பேசி செயினைப் பறிக்கும் தென்காசி சகோதரர்கள்
“162 வழக்குகள்; மூன்றரைக் கிலோ தங்கம்” – செல்போனில் பேசி செயினைப் பறிக்கும் தென்காசி சகோதரர்கள்இரவு 8 மணிக்கு போனில் பேசும் தென்காசி அருகே உள்ள கடையம் புங்கம்பட்டியைச் சேர்ந்த முருகனும் சுரேஷும் செயினைப் பறித்த பிறகு, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், போலீஸார் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க வியூகம் அமைத்தனர். இந்தச் சமயத்தில், தென்காசி […]
ராமேஸ்வரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்…
‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் […]
பெண்களைக் காக்கும் `காவலன்’ செயலி… பயன்படுத்துவது எப்படி?
பெண்களைக் காக்கும் `காவலன்’ செயலி… பயன்படுத்துவது எப்படி? இந்த ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும்.பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழகக் காவல்துறை “காவலன் SOS’ என்ற ஆப்பை இந்த வருடம் அறிமுகம் செய்தது.இந்த ஆப்பை டவுன்லோடு […]
2 மாத காதல்; திருமண வற்புறுத்தல்; மலையிலிருந்து தள்ளிவிட்டேன்
2 மாத காதல்; திருமண வற்புறுத்தல்; மலையிலிருந்து தள்ளிவிட்டேன்!’ -வேலூர் சிறுமியைக் கொன்ற காதலன்திருமணத்துக்கு வற்புறுத்தியதால், கல்குவாரி மலை உச்சியிலிருந்து சிறுமியைத் தள்ளிவிட்டுக் கொன்றதாகக் கைதான காதலன் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். வேலூரை அடுத்த அரியூர் குப்பத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவரின் 17 வயது மகள், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்துவந்தார். கடந்த 14-ம் தேதி மதியம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட அவர், திடீரென மாயமானார். அவரின் பெற்றோர், வேலூர் வடக்கு காவல் […]