சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம்போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் அத்துமீறு பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் ஆணையர் எச்சரித் துள்ளார். ஆங்கில புத்தாண்டு ‘2020’-ஐ வரவேற்கும் விதமாக சென்னை மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய கடற் கரை பகுதிகளில் வரும் 31-ம் தேதி நள்ளிரவு மக்கள் அதிக அளவில் திரள்வார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். நட்சத்திர ஓட்டல்கள், கடற் […]
Day: December 28, 2019
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர் 22.12.2019-ம் தேதியன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திரு.சுபாஷ் சீனிவாசன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு காலில் காயம் பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை கண்டதும் அவரை மீட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் உணவு உண்ணவும் வழிவகை செய்தார். இவரின் இச்செயலை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் தலைமை காவலரை வெகுவாக […]
தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்
தூத்துக்குடியில் பள்ளிக்கு இருக்கைகள் மற்றும் உபரணங்களை வாங்கி கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர் திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதிய இருக்கைகள் இல்லாததால் திருச்செந்தூர் காவல்துறையினர் தாமாக முன்வந்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரூபாய் 30,000/- மதிப்பிலான இருக்கைகள் மற்றும் உபகரணங்களை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் 22.12.2019 அன்று வழங்கினார்.
புதுக்கோட்டையில் வாக்குபெட்டியை தூக்கிச் சென்ற இளைஞர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பெரிய மூலிப்பட்டியில் நேற்று வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பெட்டியைத் தூக்கிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பெரிய மூலிப்பட்டியில் நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவுற்ற பிறகு அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வெளியே சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் பூட்டப்பட்டிருந்த வாக்குச்சாவடியின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த ஒருவர், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார். தகவலறிந்து அங்கு […]