Police Department News

குளத்தில் மூழ்கி மூவர் பலி! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்

குளத்தில் மூழ்கி மூவர் பலி! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி இந்திரா (வயது 34). இவரது மகள் சுமித்ரா (வயது 13), அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய மனைவி அனந்தம்மாள் செல்வி (வயது 43) ஆகியோர் இன்று (05.01.2020) காலை பனையூர் பெரியகுளம் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் பனையூர் பக்கமுள்ள புதுக்குளத்தில் அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நீச்சல் தெரியாத இவர்கள் மூவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் […]

Police Department News

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி டிரைவர்!

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த லாரி டிரைவர்! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!! திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்தும், கல்லை துக்கி வீசி உடைத்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வத்தலக்குண்டி திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. […]

Police Department News

லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் கைது!

லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் கைது! சென்னை: லஞ்ச வேட்டையில் ஈடுபட்ட, வருவாய் ஆய்வாளர் மற்றும் நில அளவையரை போலீசார் கைது செய்தனர். மூன்று அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில், 2.74 லட்சம் ரூபாய் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் பாபு; வருவாய் ஆய்வாளர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர், வீடு கட்ட குவித்து வைத்திருந்த மணலை ஆய்வு செய்துள்ளார். ரூ.7,000 லஞ்சம் அப்போது, ‘சட்ட விரோதமாக மணல் குவித்து […]

Police Department News

மாணவியை அரிவாளால் தாக்கிய சைக்கோ.. எச்சரிக்கை அவசியம்!

மாணவியை அரிவாளால் தாக்கிய சைக்கோ.. எச்சரிக்கை அவசியம்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ளது பட்டறை வேலம்பாளையம் என்ற கிராமம். இன்று காலை 15 வயது கொண்ட மாணவி தன் வீட்டுக்கு முன்பு உள்ள போர்வெல் குழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 30 வயதுள்ள குமார் என்பவன் கையில் அரிவாளுடன் வந்து அந்த மாணவியை திடீரென தாக்க தொடங்கினான்.ஐயோ, அம்மா, காப்பாத்துங்க.. என அலறினாள் மாணவி, ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி […]

Police Department News

`உங்க வீட்ல சோதனை பண்ணணும்!’- மதுரையில் போலீஸ் போல் நடித்து 170

`உங்க வீட்ல சோதனை பண்ணணும்!’- மதுரையில் போலீஸ் போல் நடித்து 170 சவரன் நகையைக் கொள்ளையடித்த கும்பல் பாதி வழியில் அவர்களின் திட்டம் மாறியதால் கொள்ளைக் கும்பல் குணசேகரனையும் அவரது மனைவியையும் வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.மதுரை கூடல்நகர் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல கான்ட்ராக்டர் குணசேகரன். இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளை அதிகமாகச் செய்துவரும் ஏ-1 ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த மர்மக் கும்பல் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு போலீஸ் தோரணையில் பேசியுள்ளது.“உங்கள் […]

Police Department News

வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு மிரட்டல்.. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க அணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் சான்றிதழ்கள் பெறவும் பலகட்ட போராட்டங்களை நடத்தி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். அதிலும் பல இடங்களில் தபால் வாக்குகளை எண்ணாமலேயே மாற்றி மாற்றி அறிவித்துவிட்டதாக பல குழப்பங்கள் இன்னும் நீடிக்கிறது.இந்த குழப்பங்கள் குறித்து பல வேட்பாளர்களும் நீதிமன்றத்தை நாட தயாராகி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மணமேல்குடி ஒன்றியத்தில் […]

Police Department News

சிறார் ஆபாச வீடியோ… கோவையில் வடமாநில இளைஞர் கைது!

சிறார் ஆபாச வீடியோ… கோவையில் வடமாநில இளைஞர் கைது! தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர் மற்றும் பரப்புவோர் பற்றிய பட்டியலை தமிழக காவல்துறை சேகரித்து வருகிறது. அதன்பொருட்டு அண்மையில் திருச்சியில் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பரப்பியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.குழந்தைகள் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அசாமை சேர்ந்த இளைஞர் ரெண்டா பாசுமடாரி என்பவர் கோவை பாலக்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். […]