காதல் ஜோடிகளை விரட்டியடித்த போலீசார். நாகர்கோவில் பூங்காவில் காதல் ஜோடிகளை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சி பராமரிப்பில் சர்.சி.பி ராமசுவாமி ஐயர் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பின்றி இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த பூங்காவில் ஒரு பகுதி வாகன பார்க்கிங் ஆக மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய பல பகுதிகள் புதர்மண்டிய நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து தொங்குகின்றன, ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் பூங்காவில் பொழுதை […]
Day: January 7, 2020
ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது.
ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் மண்டை உடைப்பு போதை ஆசாமிகள் 3 பேர் கைது. பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (24). அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் ஐ.சி.எப் வழியாக பைக்கில் சென்றபோது, அங்கு போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபடுவது தெரிந்தது. அவர்களை காவலர் கிஷோர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில், கிஷோர் மண்டை […]
*கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் உடுமலை காரத்தொழுவு-வை சேர்ந்த பொன்ராஜ்(27) என்பது தெரியவந்தது பின்னர் அவர் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ரூபாய் 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு […]
`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த
`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த நீலகிரி காவல்துறை2019-ம் ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவுசெய்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த அளவு குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் நடந்திராத ஆண்டாக 2019 நிறைவடைந்தது. ஆனால், நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 21 […]
வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு…வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்…!
வெற்றி அறிவிப்பில் தில்லுமுல்லு…வேதனையில் தீக்குளிக்க முயற்சித்த வேட்பாளர்…! வாக்கு எண்ணிக்கையானது, சில வேட்பாளர்களை நொந்து நூலாக்கி விடுகிறது. அப்படி ஒரு வேட்பாளராக இருக்கிறார் ராமமூர்த்தி. வாக்கு எண்ணிக்கை அறிவிப்பில் குளறுபடி இருப்பதாக தீக்குளிக்க முயற்சித்தார். சாலை மறியலிலும் கூட ஈடுபட்டு போராடி வருகிறார்.விருதுநகர் – கூரைக்குண்டு ஊராட்சியின் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார் சரவணன். அவரோடு, சரவணன் என்பவரும், பெண் வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்தபொது, ராமமூர்த்தியும் சரவணனும் தலா 183 வாக்குகள் […]