கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம். வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நிலையில், கண்காணிக்க தவறியதாக, இரு எஸ்.எஸ்.ஐ., இரு ஏட்டுகள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.சேலம், கன்னங்குறிச்சியில், கடந்த, 14, 15ல், ஏரிக்கரை சாலை, ராமநாதபுரம் கிழக்கு தெரு பகுதிகளில், வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம், மடிக்கணினி ஆகியவை கொள்ளைபோனது. இதுகுறித்து, நேற்று வரை, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஐந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, வாகன தணிக்கை, குற்றவாளிகளை கண்காணிப்பதில் தொய்வு […]
Day: January 19, 2020
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது.
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது. ஆரோவில் அருகே சப் இன்ஸ்பெக்டரை திட்டி, தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேற்று பொம்மையார்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் வாகன தணிக்கை செய்தார். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை திட்டி, தாக்க முயன்றார். உடன், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பசுபதி என்கிற பச்சையப்பன், 26; […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று காவலர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும், […]
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர், கடந்த 10ம் தேதி சென்னையில் 4 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார். அவரை பிந்தொடர்ந்த மர்மநபர்கள் 4 பேர் டெல்லி போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் […]
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி, பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி, பொங்கல் கொண்டாடிய திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி புது-தாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை அருகில் உள்ள கோகுலம் மனநலம் பாதித்தோர் இல்லத்தில், பழனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் பழனி நகர் காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார். பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சையத் பாபு, சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.வீரகாந்தி மற்றும் போக்குவரத்து […]