காஞ்சிபுரம் நகர் மற்றும் பஸ் நிலையத்தில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர் – சிறுமியர் பிச்சையெடுத்து வந்தனர்.இதையறிந்த, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவினர் மற்றும் குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் சேர்ந்து, பிச்சை எடுத்த, 11 சிறுவர் – சிறுமியரை, நேற்று மீட்டனர்.இதில், ஏழு பேர், உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர், வேலுார் மாவட்டம் பணப்பாக்கத்தை சேர்ந்தோர் என்பது தெரியவந்தது பின், மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மீட்பு குழுவைச் […]
Day: January 6, 2020
கார் மீது அரசு பஸ் மோதி விபத்து…ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி…!
கார் மீது அரசு பஸ் மோதி விபத்து…ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி…! திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மைய நாயக்கனூர் அருகே ஐயப்ப பக்தர்கள் மூன்று பேரும் அவர்களின் குழந்தைகள் இரண்டு பேரும் மதுரை வழியாக திண்டுக்கல் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். அந்த கார் அம்மையநாயக்கனூர் அருகில் வரும் பொழுது கார் டயர் திடீரென வெடித்ததால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் மாற்று பகுதியில் தடுப்பு சுவரை […]
கடலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!
கடலூர்: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்! கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்.டி பிரிவில் வரக்கூடிய காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த மகேஸ்வரி என்பவர் எஸ்.சி (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்) என போலியாக சாதி சான்றிதழ் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும்,தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையை அபகரித்த அவருடைய வெற்றியை ரத்து செய்ய வலியுறுத்தியும், அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் […]
தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்!
தேக்கி வைத்த பட்டாசுகள் வெடித்து குடோன் தரைமட்டம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒரு அறை தரைமட்டமானது. ஆலை செயல்படாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறையில் புதுஅப்பநேரி பகுதியைச் சேர்ந்த அட்சயராமானுஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. ஏ.வி.எம். என்ற பெயரில் செயல்படும் இந்த ஆலையில் 31 அறைகள் உள்ளது. அனைத்து வகை பட்டாசுகளும் தயாரிக்கும் வகையில் நாக்பூரில் […]