பூட்டிய வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதுத் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன்.கடந்த வாரம் 13-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே மின்மீட்டர் பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு கணவன்-மனைவி 2 பேரும் பள்ளிவாசலுக்கு இரவு தொழுகைக்கு சென்றார்.தொழுகை முடிந்த பிறகு இரவு வீட்டுக்கு வந்த போது, 10 பவுன் நகை, ரூ.2,500 மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுதொடர்பாக புளியங்குடி துணை […]
Month: March 2024
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த பெண் ரயில்களில் சோதனைகள் செய்வது, விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறை உடையில் உலா வந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார். நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்தவர் ஜடலா மாளவிகா. சிறுவயதில் இருந்தே எஸ்.ஐ. ஆக வேண்டும் என்பது மாளவிகாவின் கனவு. மாளவிகாவை போலீஸ் […]
ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளத்தில் ஏற்காடு ஒன்று. இதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறைகளில் வருகிறார்கள். இந்தச் சூழலில் நேற்று காலை ஏற்காடு காவல்துறைக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அதில், ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகே சூட்கேஸ் ஒன்று கிடப்பதாகவும், அதிலிருந்து அழுகிய துர்நாற்றம் வெளிவருவதாகவும் கூறியுள்ளனர். அதன்மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஏற்காடு […]
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54). அவரின் மனைவி விசித்ரா (46). இந்தத் தம்பதிக்கு ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நான்கு பேரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு […]
கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் .
கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வடக்குப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். லாரி ஓட்டுநரான இவரை கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி முதல் காணவில்லை. வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் பல நாள்களாகியும் வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த விக்னேஷின் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காணாமல்போன விக்னேஷை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு […]
திருமண உறவை தாண்டிய நட்பால், பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமண உறவை தாண்டிய நட்பால், பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரம், விழுப்புரம் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம், காவணிப்பாக்கம் மலட்டாற்றில் நேற்று முன் தினம் மாலை, சிதைந்து எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், அந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுகுறித்து வழக்குப் பதிவு செய்த […]
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது: தரகரும் சிக்கினார்
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இணை சார் பதிவாளர் கைது: தரகரும் சிக்கினார் சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (55). இவர், மோரை பகுதியில் 2,400 சதுர அடியில் புதிதாக நிலம் வாங்கி, கடந்த 19ம் தேதி ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த நிலத்திற்கான பத்திரம் பெறுவதற்கு இணை பத்திர பதிவாளரான செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அமுல்ராஜ் (35) என்பவரை அணுகியபோது, அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். […]
உளுந்து மூட்டைகளுடன் மறைத்து வைத்து கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 டன் குட்கா பறிமுதல்
உளுந்து மூட்டைகளுடன் மறைத்து வைத்து கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 டன் குட்கா பறிமுதல் கர்நாடகாவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள், மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட தனியார் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு கன்டெய்னர் லாரியில் கர்நாடக மாநிலத்தில் […]
சென்னை தாம்பரத்தில் போலி பத்திரம் மூலம் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் கைது: 2 உதவியாளர்களும் சிறையில் அடைப்பு; மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு?
சென்னை தாம்பரத்தில் போலி பத்திரம் மூலம் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் கைது: 2 உதவியாளர்களும் சிறையில் அடைப்பு; மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு? சென்னை: சென்னை தாம்பரத்தில் 3 ஏக்கர் நிலத்தை ஒரு கும்பல் போலி ஆவணம் மூலம், பதிவு செய்வதற்காக தாம்பரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய மணிமொழியனிடம் தொடர்பு கொண்டுள்ளனர். அவரும், அவரது உதவியாளர்கள் லதா, சபரீஸ் ஆகியோர் உதவியுடன் போலியான பத்திரத்தை பதிவு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்படி, ரூ.300 கோடி […]
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3 பேர் கைது
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3 பேர் கைது மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் இருந்து சிலைமான் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்ற ஹி மாண்பு மதுகர் விமலிடம் வழிப்பறி செய்துள்ளனர். கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை கொள்ளையடித்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் (20), வசந்தகுமார் (20), வாசுதேவன் (16) […]