பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக புகார்- நெல்லை கண்ணன் கைது! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக, பாஜக கட்சியின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த பாஜக கட்சியின் நிர்வாகிகள் நெல்லை […]
Month: January 2020
3 முதல் 4 நிமிடங்கள்தான்!’ – அவசர அழைப்புகளுக்கான ரெஸ்பான்சில் கோவை போலீஸ்டாப்’அவசர
3 முதல் 4 நிமிடங்கள்தான்!’ – அவசர அழைப்புகளுக்கான ரெஸ்பான்சில் கோவை போலீஸ்டாப்’அவசர அழைப்புகளைத் தொடர்ந்து 3 முதல் 4 நிமிடங்களில் சம்பவ இடத்தில் கோவை போலீஸார் ஆஜராகி விடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன் தெரிவித்தார். அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் கோவை மாநகரக் காவல்துறை விரைந்து சிறப்பாக செயல்பட்டிருப்பதாக மாநில காவல் கட்டுப்பாடு மையம் பாராட்டு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தர மதிப்பீட்டில், கோவை மாநகர காவல்துறைக்கு 5-க்கு 4.6 என்ற மதிப்பீடு […]
ஒரே ஆண்டில் 24 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து…- ஈரோடு போலீஸ் சாதனை
ஒரே ஆண்டில் 24 ஆயிரம் பேரின் லைசென்ஸ் ரத்து…- ஈரோடு போலீஸ் சாதனை ஈரோடு மாவட்ட காவல்துறை வாகன விதிமீறல் வழக்குகளில் அதிக வழக்குகள் பதிவு செய்து மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதுபற்றி மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் சென்றாண்டு நடந்த 180 சாலை விபத்துகளில் 203 பேர் இறந்துள்ளனர். இது 2018 ஆண்டை விட 44 சதவிகிதம் குறைவு. சாலை விதிமுறை மீறல் தொடர்பாக மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 699 […]
கோலம் போட்டதால் கைது செய்யப்படவில்லை’- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம்!
‘கோலம் போட்டதால் கைது செய்யப்படவில்லை’- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம்! சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன. வெளி மாநில குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் சென்னை காவல்துறை சிறந்து விளங்குகிறது. விபத்துகளில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்ஆதாய கொலைகள், பெண்களுக்கு […]
பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை சிறந்த நகரமாக விளங்குகிறது
பெண்கள் , குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே சென்னை சிறந்த நகரமாக விளங்குகிறது 2018ம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைவு2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு சம்பவங்கள் 50% குறைந்துள்ளது. வன்கொடுமை & வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்களும் 2019ஆம் ஆண்டு குறைந்து உள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டு 20 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது* காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன்
திருப்பூர் ஜெய்வா பள்ளியில் போலிஸ் பலத்த பாதுகாப்பு
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கைகாக திருப்பூர் ஜெய்வா பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் அமரும் வண்ணம் தனி தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
கடலுார் மாவட்டத்தில் 14 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை! வாக்கு எண்ணும் பணியில் 6,500 அலுவலர்கள்!
கடலுார் மாவட்டத்தில் 14 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை! வாக்கு எண்ணும் பணியில் 6,500 அலுவலர்கள்! தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது.அதன்படி கடலூர் ஊராட்சி ஒன்றிய வாக்கு […]
இருமல் தொல்லைக்காக நரம்பு ஊசி போட்டார்!’ -பெரம்பலூர் போலி
இருமல் தொல்லைக்காக நரம்பு ஊசி போட்டார்!’ -பெரம்பலூர் போலி மருத்துவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்போலி மருத்துவர்களால் ஏற்படும் விபரீதங்கள் அவ்வப்போது திகிலடைய வைக்கிறது. அந்தவகையில், மருந்துக் கடைக்காரர் போட்ட நரம்பு ஊசி, பெண் ஒருவரின் உயிரைப் பறித்த அதிர்ச்சி சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய கிராமங்களான கீழப்புலியூர், முருகன்குடி, எழுமூர், பெருமத்தூர், வி.களத்தூர், வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மருத்துவம் படிக்காத சிலர் அப்பகுதிகளில் வலம்வருவதுடன், ஆங்கில மருத்துவமான அலோபதி முறையில் மக்களுக்கு […]