ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள். கொரனோ தொற்று நோய் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊத்தங்கரையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பெருகோபனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் அரிசி காய்கறி பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பெருமளவு […]
Month: April 2020
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்! கடையநல்லூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் வீடுகளிலே தொழவேண்டும் மற்றும் கஞ்சி பள்ளிவாசலில் வினியோகம் கூடாது.. மேலும் இரவுத் தொழுகையை பள்ளிகளில் தொழ வேண்டாம் என்று நிர்வாகிகளை டிஎஸ்பி சக்திவேல் அவர்கள் கேட்டு கொண்டார்.
சோதனை சாவடிகளில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சோதனை சாவடிகளில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. ஊரடங்கையொட்டி நெல்லை மாநகர் […]
மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் முழு முயற்சியால் இன்று 23.04.2020- ம் தேதி மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் […]
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர்.
பொதுமக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நடமாடும் ஏ.டி.எம் மிஷினை ஏற்பாடு செய்த பணகுடி காவல்துறையினர். பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழவூர் வட்டாரப் பகுதி கிராம மக்களின் பணத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கன்னங்குளத்தில் பணம் எடுத்து செல்கின்றனர், மேலும் 14 கிராமங்களில் பணம் எடுக்கும் வாய்ப்பு உருவாக்க பட்டு உள்ளது. பணகுடி காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது […]
பணம் வைத்து சூதாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்..
பணம் வைத்து சூதாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.. 23.04 .2020 தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல்நிலையம் உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி வருகின்றனர். பல ஊர்களில் இருந்து வந்து சூதாட்டம் விளையாடி வருவதால் அங்குள்ள மக்கள் கொரானா அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.பணிபுரியும்.சத்தியமங்கலம்..போக்குவரத்து. தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்கள். 144.தடைஉத்தரவின்.போது.உணவு. இல்லாமல்.தவிக்கும்.உடல்.ஊணமுற்றோர்களுக்கு.தனது.சொந்த.செலவில்.உணவு. வழங்கிய.போது.எடுத்தபடம்…இதுமட்டும்.இல்லாமல்.கொரொனொ.வைரஸ்.பற்றிய.விழிப்புணர்வு. பாடல்.பாடி.தமிழகம்.முழுவதும்.பிரபலமானவர்.நமது.தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்களுக்கு.போலீஸ் இ நியூஸ்.சார்பாக சல்யூட்.. ஈரோடு. மாவட்ட. செய்தியாளர்.R.கிருஷ்ணகுமார்
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை.
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – சின்ன கருப்பூர் பகுதியை சார்ந்த திருமதி . ரேகா (45), [கணவர் பெயர் திரு. சுவாமிநாதன்] ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஒரு மாதமாக மருந்து இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் Thanjavur District Police Facebook page மூலமாக அறிந்த கும்பகோணம் போலீசார் அனுமதி சீட்டுடன் வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை ஊர் காவல் […]
விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக
விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன், சென் ஜோசப் கார்மல்மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவர் R. சாய் ஹரி, தனது சேமிப்பு பணம் ரூ 1600.00 தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார், சிறுவனைப்பார்த்துவியப்படைந்த ஆய்வாளர் பாலமுருகன் தனது சொந்த பணம் ரூ 1000.00 , புத்தகங்கள், […]