தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தடை உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், […]
Month: May 2020
கல்யாண மாப்பிள்ளை தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர்
கல்யாண மாப்பிள்ளை தவறவிட்ட தங்கச் செயினை உரிய நேரத்தில் ஒப்படைத்த கங்கைகொண்டான் காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம் 13.05.2020 திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெரோம் பெர்னால்டு என்பவருக்கு இன்று கல்யாணம் நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தார். கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனத்தை பதிவு செய்யும் போது தனது தங்க செயினை தவறவிட்டுள்ளார். தவறவிட்ட செயினை கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பணிபுரியும் காவல்துறையினர் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு செய்துங்கநல்லூர் அருகே சென்றதும் செயினை காணவில்லை என […]
ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சி.முருகையன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் வழங்கினார்கள்.
ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சி.முருகையன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் வழங்கினார்கள். வேலம்பாளையம் காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு சானிட்டரி மற்றும் டெட்டால் சோப்புகளை கடந்த இரண்டு நாட்களாக வேலம்பாளையம் மண்டல அலுவலகம் சிறுபூலுவபட்டி அனுப்பர்பாளையம் பகுதிகளில் இன்று வழங்கப்பட்டது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள் ஈரோடு மாவட்ட செய்திகளுக்காக போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் PS.வெங்கட சுப்பிரமணியன்
சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள்.
சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் உமாமகேஸ்வரி மற்றும் அபிதா ஆகியோர் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, பின் அவரிடம் முகவரி கேட்டறிந்து தனது வாகனத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார்கள். பெண் காவலர்களின் செயலுக்கு […]
ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள்
ஈரோடு மாவட்டம் கொரோனாவில் பணிபுரிந்த அனைத்து காவல்துறையினருக்கும் காவலர்களின் நலன் கருதி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் I.P.S அவர்கள் A,B,C என்ற ஷிப்ட் முறைப்படி விடுப்பு வழங்கியதற்க்கு ஈரோடு மாவட்ட அனைத்து காவலர்களும் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். வெகு சிறப்பாக பணியாற்றிவரும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. போலீஸ் இ நியூஸ் கொங்கு மண்டல செய்தியாளர் Dr.M.நாகராஜன்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர் வரதராஜன் மற்றும் முதல் நிலை காவலர் திருமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யன் நகர் ஏழாவது வீதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் அய்யன்நகரைச் சேர்ந்த பிரவீன்(31) தினேஷ் […]
அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்
அநாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத அனாதை பிணத்தை ஊத்துக்குளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக முன்வந்து தன்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்தார். உயிரோட்டயமான பாராட்டுக்கள் போலீஸ் இ நியூஸ் மு.சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான
மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் திருமதி. மனோன்மணி அவர்கள் தலைமையிலான போலீசார் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்த போது, ஓட்டுனரின் நடவடிக்கையை சங்கு சந்தேகித்த போலீசார் வாகன சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ. 90¸000 மதிப்பிலான போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லை பகுதிகளில் கரோனா பரிசோதனை: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கான கரோனாபரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் […]