மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் ஆணையரால் திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு மையத்தை பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம் தெப்பக்குளம், முக்தீஸ்வரர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு மையத்தினை தினசரி 1000 கணக்கில் பொதுமக்களும்,, மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.. அதன்படி இன்று 06.10..23.. தியாகராசர் பள்ளியை சார்ந்த 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.. அப்போது போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு அளித்தும் விபத்து தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்
Day: October 6, 2023
மதுரையில் புத்தக கண்காட்சி
மதுரையில் புத்தக கண்காட்சி மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து […]
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம்
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம் மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தை உள்ளடக்கிய விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்க […]
சங்கரன்கோவில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு
சங்கரன்கோவில் சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை போலீசில் ஒப்படைத்த தொழிலாளிக்கு பாராட்டு சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்த வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நடராஜன் சாலையோரம் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் விலை கூடிய வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.அதேநேரம் சங்கரன்கோவில் பகுதியில் 4 கிலோ பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த மதுரையை சேர்ந்த வெள்ளி வியாபாரி முத்துக்குமார் […]
செங்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பஞ்சாயத்து ரோட்டை சேர்ந்தவர் கலைவாணி என்ற அம்மு(வயது 21). இவருக்கு ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக மனவேதனையில் இருந்த கலைவாணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத […]
தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி
தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி சங்கரன்கோவில்:மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது […]
வேடசந்தூரில் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடிச் சென்ற 2 பேர் கைது
வேடசந்தூரில் மோட்டார் சைக்கிளில் ஆட்டை திருடிச் சென்ற 2 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீட்டு முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திருடிச் சென்றனர்.இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஜெகதீஸ்வரன் புகார் அளித்தார். நேற்று இரவு ஆத்துமேடு […]
இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாயாரின் கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு
இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தாயாரின் கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு கடலூர் மாவட்டம்பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம் சேலம் மெயின் ரோடு புதுநகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கடந்த 5ஆண்டுகளுக்குமுன்இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயமாலா (40) செங்கல்சூளையில் கூலி தொழிலாளி. இவர்களுக்கு ஜெகன் பிரியா, சத்யபிரியா ஆகிய 2 மகள், கிரி என்கிற ஒரு மகன் உள்ளனர். மூத்தமகள் ஜெகன் பிரியாவை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் மூத்த […]