Police Department News

பாலக்கோடு அடுத்துள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் புளியமரத்தடியில் சூதாடிய 4 பேர் கைது. 1,230 ரூபாய் பணம் பறிமுதல் .

பாலக்கோடு அடுத்துள்ள தொட்டம்பட்டி கிராமத்தில் புளியமரத்தடியில் சூதாடிய 4 பேர் கைது. 1,230 ரூபாய் பணம் பறிமுதல் . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது,தகவலின் பேரில் எஸ்.ஐ.கோகுல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ள புளிய மரத்தடியில் சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் ,அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான மணி ( வயது. 23), சந்தோஷ்(வயது. 22), விக்னேஷ்(வயது23), […]

Police Department News

முதல்- அமைச்சரிடம் விருது – கேக் வெட்டி கொண்டாடிய தென்காசி போலீசார்

முதல்- அமைச்சரிடம் விருது – கேக் வெட்டி கொண்டாடிய தென்காசி போலீசார்  2023-ம் ஆண்டிற்கான விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பெற்றார் அதனை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கேக் வெட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்-அமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக […]

Police Department News

சென்னை தண்டையார்பேட்டையில் மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி

சென்னை தண்டையார்பேட்டையில் மின்சார ரெயில் மோதி சிறுவன் பலி ராயபுரம்:கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). நேற்று இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதியது.இதில் லோகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]

Police Department News

தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடி வழியாக லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடி வழியாக லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 105 கிலோ கஞ்சா பறிமுதல் ஓசூரில் இருந்து ஒரு மினி லோடு ஆட்டோவில் உருளை கிழங்கு ஏற்றிக் கொண்டு 2 பேர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக தென்காசி மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.தென்காசி மாவட்டம் சிவகிரி சோதனை சாவடியில் இன்று காலை அவர்கள் வந்தபோது, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி தலைமையிலான போலீசார் லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உருளைகிழங்கு […]

Police Department News

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் சிவகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சக்திவேல், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.அருகில் துணை மேலாளர்கள் தசங்கர் (வணிகம்) ரங்கராஜன், (பணியாளர் […]

Police Department News

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வியாபாரி கைது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அரி பால சுப்பிரமணியன் (வயது 33). பீடி வியாபாரி.இவர் தனது ஆட்டோவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு புகார் சென்றது.இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார், குருவன்கோட்டை – துத்தி குளம் சாலையில் அரி பால சுப்பிரமணியன் […]

Police Department News

கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்து வருபவர் வள்ளி கிருஷ்ணவேணி. இவரும் வில்லிபத்திரி தலையாரி சிதம்பரமும் சின்னவள்ளிகுளம் கிராமத்தில் புது ஊருணி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அளந்துவிட்டு பின்னர் நான்கு பகுதிகளிலும் கல் ஊன்றுவதற்காக சின்னவள்ளிக்குளம் நாடக மேடை அருகே கிராம நிர்வாக அதிகாரி வள்ளி கிருஷ்ணவேணியும், தலையாரி சிதம்பரமும் நடந்து சென்றனர். அப்போது அவர்களை சின்ன […]

Police Department News

சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் தீயணைப்பு துறையினரின் RTI விழிப்புணர்வு பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைகுடியில் தீயணைப்பு துறையினரின் RTI விழிப்புணர்வு பிரச்சாரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் இயக்குனர் அவர்களின் மேலான உத்தரவுபடி தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட அலுவலர் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் சிவகங்கை அவர்களின் தலைமையில் காரைக்குடி நகராட்சி சேர்மன் சே. முத்து துரை அவர்கள் கொடி அசைத்து மாரத்தான் தொடங்கி வைத்தார் இதில்மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர் […]

Police Department News

போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலச்செவல் மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுபக்குமார், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் அன்னபூரணி கலந்து கொண்டு பேசினார். இதில் சேரன்மகாதேவி […]

Police Department News

பார் உரிமையாளர் கொலைக்கு பழிக்குப்பழி: வாலிபர் கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது

பார் உரிமையாளர் கொலைக்கு பழிக்குப்பழி: வாலிபர் கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த […]