தமிழக ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை தமிழக ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி துவங்கப்பட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு 1 கிலோ பருப்பு 30 ரூபாயிக்கும் 1 லிட்டர் பாமாயில் 25 ரூபாயிக்கும் 1 கிலோ சக்கரை 25 ரூபாயிக்கும் விற்க்கப்படுகின்றன.இது தவிர கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை சமையலெண்ணை மாவு வகைகள் போன்றவைகளும் விற்க்கப்படுகின்றன. மொத்தமுள்ள 35,000 ரேஷன் கடைகளில் 33,000 ஐ கூட்டுறவு துறையின் […]
Day: October 14, 2023
போலீசார் எச்சரிக்கை அறிவுரை அதிகாலை கோலம் போட வெளியே வர வேண்டாம்
போலீசார் எச்சரிக்கை அறிவுரை அதிகாலை கோலம் போட வெளியே வர வேண்டாம் சிவகங்கை. வ.உ.சி. , ரோட்டில் காலை 5.30 மணிக்கு வாசலில் கோலம் போட வந்த மூதாட்டியிடம் டூ வீலரில் வந்தவர்கள் 16 பவுன் நகையை பறித்து தப்பினர். வீரவலசை விலக்கில் அரசு பஸை வழி மறித்து அறிவாளால் கண்டக்டரை மிரட்டிபணப்பையை பறித்து சென்றனர் வல்லனி ரோட்டில் மூதாட்டியிடம் 8 பவுன் வழிப்பறி என சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ரோட்டில் நடந்து […]
காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்பெக்டர்
காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்பெக்டர் திருப்பத்தூர் மாவட்டம் உமாராபாத் போலீஸ் ஸ்டேஷனில் பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யுவராணி இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முறையாக துரிதமாக விசாரணை நடத்தவில்லை என புகார் சென்றது இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி.,முத்துசாமி விசாரணை நடத்தினார் அதில் உண்மையென தெரிய வந்ததால் யுவராணியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.
பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் […]
வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சங்கீதா. இவர்களது குழந்தைகளின் படிப்பிற்காக மேலூர் அருகே உள்ள குத்தப்பன்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி தமராக்கியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணேசன் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த […]
போக்சோ வழக்குகளில் குழந்தையின் நலனே முக்கியம்: ஐகோர்ட்
போக்சோ வழக்குகளில் குழந்தையின் நலனே முக்கியம்: ஐகோர்ட் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடமைகளை எடுக்க சென்ற போது, தாய் மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிறுமியின் தாய் மாமா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு […]
ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது
ஓட்டல் தொழிலாளி கொலையில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் கைது தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. […]
மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை
மதுரையில் காவல் துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இலவச உடல் பரிசோதனை மதுரை மாநகர் ஆயுதப்படை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில்.. காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை மதுரை காவல் ஆணையர்.. திரு.. லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். அந்த சமயம் போக்குவரத்து துணை ஆணையர் குமார்.. கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள்,, ஆய்வாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]
கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம்.
கரிக்கம்பட்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவி உட்பட இருவர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி சாம்ராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா (வயது.18) அதே ஊரை சேர்ந்த நவநீதன் (வயது .16)கீர்த்தனா கோயமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்,இவர் விடுமுறைக்கு வீட்டிற்க்கு வந்தவர், இன்று காலை பாலக்கோடு செல்வதற்காக ஆட்டோவில் கீர்த்தனாவும் அதே ஊரை சேர்ந்த நாவீதன் என்பவரும் சென்று கொண்டிருந்தனர்.கரிக்கம்பட்டி சாலையில் டிரைவரின் […]