Police Department News

பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.

பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டாசு கடை அமைக்க உள்ள இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் […]

Police Department News

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 107 மனுக்கள் பெறப்பட்டு 89 மனுக்களுக்கும் விசாரணை முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு ராமச்சந்திரன் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.